நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் நேற்று, தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியானது. இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டர்களின் நடித்திருக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டில் நடிகர் விஜய், பிரியமானவளே என்ற படத்தில் நடித்தார். பிரியமானவளே படப்பிடிப்பு நடந்தபோது, கதையில் காட்சிப்படி விஜய் மனைவி சிம்ரன் கர்ப்பமாக இருப்பார். அந்த தகவலை அறிந்து, அவரது கணவர் விஜய் சந்தோஷத்தில் பாட்டு பாடி நடனம் ஆடுகிறார். அந்த பாடல், ஜூன் ஜூலை மாதத்தில், ரோஜாப் பூவின் வாசத்தில்… என்று ஆரம்பிக்கும்.
இந்த பாடல் காட்சிக்கான ஷூட்டிங் சென்னையில் நடந்த போது, நடிகர் விஜய் மனைவி சங்கீதா, லண்டனில் இருந்தார். அவர் அப்போது நிறைமாற கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு ஓரிரு தினங்களில் குழந்தை பிறக்கும் என்ற சூழல் இருந்தது. அப்போது விஜய் இங்கே சென்னையில் பிரியமானவளே படப்பிடிப்பில் இருந்தார்.
அப்போது அந்த ஜூன் ஜூலை மாதத்தில் பாடல் காட்சியில், விஜய் பெண் வேடமிட்டு நடிக்க வேண்டும் என்று டைரக்டர் செல்வபாரதி விருப்பப்பட்டார். ஆனால், அதை விஜயிடம் செல்வபாரதி கூறிய போது, நான் பெண் வேடமிட்டு இந்த பாடல் காட்சியில் நடித்தால், அஜித் ரசிகர்கள் என்னை கலாய்ப்பார்கள். அதனால் வேண்டாம் என்று விஜய் மறுத்து விட்டார். அதனால் டைரக்டர் செல்வபாரதி பலத்த ஏமாற்றமடைந்தார்.
இந்நிலையில் திடீரென சென்னையில் இருந்து லண்டனில் இருந்து, நடிகர் விஜய்க்கு மகன் பிறந்திருப்பதாக தகவல் வந்தது. இதனால் மிகவும் உற்சாகமான நடிகர் விஜய், இன்னைக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று உத்தரவாதம் அளித்து விட்டார்.
அதன் பிறகு டைரக்டர் அவர் விரும்பிய படியே விஜய்க்கு, பெண் வேடமிட்டு, ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடல் காட்சியில் நடிக்க வைத்தார். அந்த ஒரு பாடல் காட்சியில் மட்டுமே நடிகர் விஜய் மீசையுடன், பெண் வேடமிட்டு நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தில், முதலில் மறுத்துவிட்டு பிறகு, பெண் வேடத்தில் நடிக்க, நடிகர் விஜய் ஒத்துக்கொண்ட அந்த சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது





