- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் பட போஸ்டரில் இப்படி ஒரு விஷயத்தை கவனித்தீர்களா... அட ஆமாப்பா... டிகோடில் பட்டையை கிளப்பிய...

ஜனநாயகன் பட போஸ்டரில் இப்படி ஒரு விஷயத்தை கவனித்தீர்களா… அட ஆமாப்பா… டிகோடில் பட்டையை கிளப்பிய தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

விஜய்க்கு கடந்த ஆண்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் விஜய். இது மட்டுமல்லாமல் சினேகா பிரபுதேவா பிரசாந்த் என ஏராளமான நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இருப்பினும் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட்டு விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதுதான் தனது இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக திரைத்துறையை விட்டு வெளியேற அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலும், தனது கேரியரின் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்து இருந்தார் விஜய். இப்படியான சூழலில் அவரது கடைசி திரைப்படமாக உருவானது ஜனநாயகன்.

ஹெச் வினோத் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், மமிதா பைஜு, நரேன், பிரியா மணி என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் அரசியல் கலந்த வசனங்கள் ஏராளமாக இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயகனில் விஜய் சார்ந்த போர்சன்களையும் வினோத் முடித்திருக்கிறார். தற்போது பேட்ச் ஒர்க் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

- Advertisement -

இப்படி இருக்க விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு படத்தில் இருந்து முதல் அப்டேட் வெளியாகிறது. இதற்கான போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சூரியன் அஸ்தமனாகும் நேரத்தில் விஜய் ஒரு கையை ஓங்கி உயர்த்தி வைத்திருப்பது போன்ற போஸ்டர் இடம் பெற்றிருந்தது. இந்த எளிமையான போஸ்டரையே டிகோட் செய்த தளபதி ரசிகர்கள், அவரது இடது கையில் டாட்டு ஒன்று இருப்பதாகவும், அதில் டிவிகே என்று அச்சிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தனது அரசியல் கட்சி பெயரையே அவர் டாட்டூவாக வரைந்து இருப்பதால் படத்தில் அவருக்கு அது சம்பந்தப்பட்ட பெயர்தான் இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்