- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்கு வரும் முன்பே அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரா விஜய்? - படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தால்...

அரசியலுக்கு வரும் முன்பே அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரா விஜய்? – படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தால் மக்கள் கோபம்

- Advertisement -

நடிகர் விஜய், இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர், ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அது அவரது 69வது படம். அதற்கு பின் அவர் நடிக்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார். இதற்கிடையே அந்த படத்தை இயக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிையே கடும் போட்டி நடந்து வருகிறது.

இதற்கிடையே விஜய் நடித்துவரும் 68வது படமான கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங், இப்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்துக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரசிகர் கூட்டம் திரண்டு வந்து விடுகிறது. அங்கு திரண்டிருக்கும் ரசிகர் கூட்டம், தளபதி தளபதி என கத்தி கத்தி, படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

வழக்கமாக விஜய் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார். பல நகரங்களில் அவுட்டோர் ஷூட்டிங் நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ரசிகர் கூட்டம் திரண்டது இல்லை. இப்படி இப்போது மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் திரள காரணம், விஜய் ஆலோசனைப்படி புஸ்லி ஆனந்த் ஏற்பாடுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அதாவது அரசியல் கூட்டத்துக்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து ஆட்களை வரவழைத்து கூட்டம் காட்டுவதை போல, ரசிகர் மன்றங்களில் சொல்லி இப்படி ஆட்களை வரவழைத்து விடுகின்றனர். இப்படி தினமும் செய்வதால் செல்பி, வீடியோ என தினமும் சமூக வலைதளங்களில் வைரலாகும். தங்களது அரசியல் வருகை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்படும் என்பதால் இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த கோட் ஷூட்டிங்கின் போது, இதே போல் திரண்ட ரசிகர் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அரசு ஊழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் குறிப்பிட்ட அந்த பகுதியை கடக்க முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்துள்ளனர்.

இதுபற்றி போலீசாருக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக பலரும் புகார் தெரிவித்த நிலையில், இதுபோன்ற விஷயங்கள் பெயரை கெடுத்துவிடும் என்று அதிரடி முடிவெடுத்த விஜய், இனி இப்படி அடிக்கடி அதாவது தினமும் ரசிகர்களை கூப்பிட வேண்டாம். வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என புஸ்லி ஆனந்திடம் கூறியிருக்கிறார். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே, நல்லா விஜய் அரசியல் செய்கிறாரே என சினிமா விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்