லியோ படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். சென்னை, தாய்லாந்து, பாங்காங் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து மீண்டும் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரசாத் ஸ்டுடியோ, கோகுலம் ஸ்டுடியா என இரண்டு இடங்களிலும் மாற்றி மாற்றி ஷூட்டிங் பரபரப்பாக நடத்தப்படுகிறது.
விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தை, வரும் தமிழ் புத்தாண்டு அன்று அதாவது ஏப்ரல் 14ம் தேதி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப படப்பிடிப்புகளை நடத்தி முடிக்கவும், போஸ்ட் புரடக்சன் பணிகளை திட்டமிட்டுக்கொள்ளவும் இப்போதே படக்குழு ஆயத்தமாகி வருகின்றனர்.
இப்போது முக்கிய ஹீரோக்கள் யார் நடித்த படமாக இருந்தாலும், அந்த படத்தின் டைட்டில் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதலில் படத்தின் பெயரை சொல்லித்தான் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளே அறிமுகப்படுத்துவர்.
ஆனால் இப்போது அந்த நடிகர் நடிக்கும் படத்தின் எண்ணிக்கையை பொறுத்து ரஜினி 170, கமல் 233, விஜய் 68 என பெயரிடப்படுகிறது. பிறகு, படப்பிடிப்புக்கு இடையிலேயே, படம் முடிந்த பிறகோதான் படத்தின் தலைப்பு வெளியிடப்படுகிறது. இதையும் பிரமோ என்ற பெயரில், விளம்பரமாக்கி விடுகிறது படக்குழு.
இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த விஜய் 68 படத்துக்கு மொத்தம் 4 பெயர்கள் உள்ளன. இந்த நான்கில் ஒரு பெயரை விஜய் செலக்ட் செய்து வெங்கட்பிரபுவிடம் கொடுத்துவிட்டார். அதை அவர் இன்னும் யாருக்கும் தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்.
இன்னும் 38 நாட்களில் ஆங்கில புத்தாண்டு, 2014 பிறக்கிறது. டிசம்பர் 31ம் தேதி இரவு, அதாவது ஆங்கில புத்தாண்டு பிறக்கும் சரியாக 12 மணிக்கு, விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில், வானில் கலர் கலராக வெடிக்கும் பட்டாசுகளுக்கு நடுவில் அந்த படத்தின் பெயரை வெளியிட உள்ளனர்.





