மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் கூலி படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. கூலி படத்தில் சத்யராஜ் நித்யாராம் ஸ்ருதிஹாசன் உபேந்திரா அமீர்கான் சவுபிர் சாஹிர் நாகர்ஜூனா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான 5 படங்களில் மாநகரம் கைதி 2 விக்ரம் படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. மாஸ்டர் லியோ படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. அதிலும் லியோ படத்தில் இரட்டை பிறவி ஜாதகம் நரபலி போன்ற விஷயங்கள் இருந்தது பெரிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்த படமும் பெரிய வசூலை குவித்தது.
கூலி படத்தில் அமீர்கான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த நிலையில், அடுத்து பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர்கான் நடிக்கும் பிரமாண்டமான ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ்தான் டைரக்ட் செய்கிறார். இதுகுறித்து அமீர்கானே அதிகாரபூர்வமாக கூறியிருக்கிறார். சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி படத்தில்தான் அமீர்கான் நாயகனாக நடிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியதாவது, நானும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்சன் சூப்பர் ஹீரோ ஸ்டைல் படமாக இருக்கும். கைதி 2 படத்திற்கு பிறகு அந்த படத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்.
வரும் 2026ம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தை தொடங்க போகிறோம். 2027ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வரும் என்று கூறியிருக்கிறார். நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட அந்த சூப்பர் ஹீரோ கதை என்பது நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன இரும்புக்கை மாயாவி படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.





