தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து இயக்கயுள்ள திரைப்படம் “ஜவான்” இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் இந்த படமானது செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதேபோன்று இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் தமிழ் திரை இசையமைப்பாளரான அனிருத் பாலிவுட் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்து ஜவான் திரைப்படமானது இந்தியா முழுவதுமே தற்போது பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு இந்த படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள வேளையில் இந்த ஜவான் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளதாக ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ஜவான் படத்தில் விஜய் நடித்துள்ளதாக சண்டை பயிற்சியாளர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் கவுரவ இடத்தில் இந்த ஜவான் படத்தில் நடித்துள்ளதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் வேளையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ஜவான் படம் குறித்து பேசிய சண்டை பயிற்சியாளர் யானிக் பென் கூறுகையில் :
விஜயும் ஷாருக் கானும் ஒரே பிரேமில் இருப்பதை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் விஜய் சேதுபதியைத்தான் விஜய் என்று கூறியதாக இறுதியில் மழுப்பலாக பேசி முடித்தார். ஏற்கனவே அட்லீ விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என்கிற மூன்று படத்தை இயக்கியிருந்த வேளையில் அட்லீக்காக விஜய் இந்த படத்தில் கவுரவ தோட்டத்தில் நடித்திருந்தாலும் இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.





