- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அரசியல் கட்சி துவங்க அடிப்படை காரணமே அந்த விஷயங்கள்தான்; அதனால் 2026 சட்டசபை...

விஜய் அரசியல் கட்சி துவங்க அடிப்படை காரணமே அந்த விஷயங்கள்தான்; அதனால் 2026 சட்டசபை தேர்தல் அனல் பறக்கப் போகுது – முடிவு செய்து களத்தில் குதித்த விஜய்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக போராடி இந்த இடத்துக்கு வந்துள்ளார். துவக்கத்தில் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் விஜய் எல்லாம் ஒரு நடிகரா, என்று விஜய் காதுபடவே விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தன் லட்சியத்தை அடைய பாடுபட்டு முன்னேறியவர் விஜய்.

ஒரு கட்டத்துக்கு பிறகுதான், நடிகர் விஜய்க்கான கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதுவரை இயக்குநர் சொன்ன கதைகளில்தான் விஜய் நடித்தார். விக்ரமன், பாலசேகரன், பாசில், எழில் போன்ற இயக்குநர்கள் விஜயை, ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

- Advertisement -

இப்படி அரும்பாடுபட்டு முன்னணி நடிகராக வந்த பின், விஜய் இதே சினிமா துறையில் இன்னும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது நீடித்திருக்கலாம். ஏனெனில் ரஜினிகாந்த் 73 வயதிலும் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜயும் அப்படி நடித்து இன்னும் பல நூறு கோடிகளை சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் சினிமாவில் சிறப்பான நிகழ்காலமும், இன்னும் வளமான எதிர்காலம் இருந்தும் திடீரென அரசியல் களத்தில் குதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. முதல்வர் கனவுக்காக அவர் நிச்சயம் அந்த முடிவை விஜய் எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் தளபதி விஜய், மாநில முதலமைச்சரைவிட நிறைய புகழை அடைந்திருக்கிறார்.

- Advertisement -

நிறைய பணம்தான் பொருட்டு என்றால், அது சினிமாவிலேயே அவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. பெயரும், புகழும், செல்வாக்கும் மித மிஞ்சி இருந்த நிலையில், அவர் அரசியலை தேர்வு செய்ய இரண்டே இரண்டு காரணங்கள்தான் முக்கியமானதாக இருக்கிறது. அதன் பொருட்டே இவரது அரசியல் பிரவேசம் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

அதாவது இன்றைய அரசியல் சூழல், ஊழல் மிகுந்த ஒரு நிர்வாகம் நடக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். தினமும் வறுமையில் சிக்கி துன்பப்படுகின்றனர். இது மாற வேண்டும். அடுத்து சாதி, மதம் பிரிவினைகள் இல்லாத ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும். தன்னை வாழ வைத்த ரசிகர்களுக்கு, தமிழக மக்களுக்கு இந்த இரண்டு விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில்தான் விஜய், அரசியல் களத்தில் குதித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்