- Advertisement -
Homeபொழுதுபோக்கு2026ல் மக்களின் தீர்ப்பு மாறுமா? முதல்வர் கனவு பலிக்குமா? நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஏற்படுத்திய புயல்...

2026ல் மக்களின் தீர்ப்பு மாறுமா? முதல்வர் கனவு பலிக்குமா? நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஏற்படுத்திய புயல் – ஆனாலும் விஜய்க்கு கவலை இல்லே!

- Advertisement -

சினிமாவில் நம்பர் 1 பொசிஷனில் இருந்து வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி இருக்கிறார். இப்போது அவர் நடித்து முடித்துள்ள த கோட் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தனது 69வது படத்தில் நடிக்கும் விஜய் அத்துடன் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேரமும் அரசியலில் பயணத்தை துவங்க முடிவு செய்திருக்கிறார்.

பொன் முட்டையிடும் பறவையாக, விஜய் போன்ற சில நடிகர்களே தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் நிலையில் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகிச் செல்வது தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பெரிய இழப்பாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு, விஜய் போன்றவர்களே கொள்ளை லாபம் தருபவர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி விஜய் போன்றவர்கள் தமிழில் நடிக்கும் போது குறைந்த பட்சம் 2 படங்களில் அவர்கள் நடித்தாலும், பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம், அதனால் தமிழ் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலார்கள், சக நடிகர், நடிகையர் என பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது முற்றிலும் தடைபடும் என்ற கருத்தும் சினிமா துறையினர் மத்தியில் நிலவுகிறது.

நடிகர் சரத்குமார் இதுபற்றி ஒரு நேர்காணலில் கூறுகையில் நாட்டாமை, சூரியவம்சம், நட்புக்காக என பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த நான் அப்படியே சினிமாவில் தொடர்ந்து நீடித்திருந்தால், இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில் இருந்திருப்பேன். ஆனால் அரசியல்வாதியாகி, சினிமாவில் எனக்கான இடத்தை இழந்து விட்டேன். அதனால் நெம்பர் 1 நிலையில் இருக்கும் விஜய், அரசியல் களத்தை வெளியே நின்று பார்ப்பது வேறு, அரசியல் களத்துக்குள் இறங்கி நின்று பார்ப்பது வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்திருந்தார்.

- Advertisement -

வரும் 2026ம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில் நான்தான் முதலமைச்சர் என்ற கனவில் விஜய் இருக்கிறார். அவரது கட்சியினரும், ரசிகர்களும் இருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் 39, புதுச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளையும் அள்ளிவிட்டது. இந்த சூழலில் இன்னும் 2 ஆண்டுகளில் திமுக இமேஜ் குறைந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில், இது நாடாளுமன்ற தேர்தல், மோடி தமிழ்நாட்டுக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் என்பதால், அவரை எதிர்த்து நின்ற இண்டியா கூட்டணி கட்சியை, தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். ஆனால் தமிழகத்துக்கான சட்டசபை தேர்தலில் ஸ்டாலினா, விஜயா எ்னற கேள்வி வரும்போது விஜய்க்கு தான் மக்கள் முதலிடமும், முக்கியத்துவமும் கொடுப்பார்கள். அப்போது திமுக புயல், விஜய்க்கு முன்னால் காணாமல் போய்விடும். அதனால் விஜய் இப்போதும் கவலை இல்லாமல் கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் என்கின்றன தவெக கட்சி வட்டாரங்கள்.

- Advertisement -

சற்று முன்