விஜய் நடிப்பில் லியோ படம், கடந்த 19ம் தேதி ரிலீஸ் ஆனது. லியோ ரிலீஸ் ஆன 7 நாட்களில், 461 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்திருப்பதாக, படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ஜெயிலர், விக்ரம் படங்களை காட்டிலும் மிகப்பெரிய வசூல் என்பதால், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லியோ படத்தை பொருத்தவரை, விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, படத்தில் பார்த்திபன் கேரக்டரில் அவர் பேசிய மிக தவறான வார்த்தை, விஜய் மீது பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, படத்தில் அவரே, அவரை இதுபோல் திட்டிக்கொள்வது மிகவும், அசிங்கமாக அபத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே படத்தின் பாதி வரை, ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தை உல்டாவாக்கி, நேர்த்தியான திரைக்கதையாக கொண்டு சென்ற படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இடைவேளைக்கு பிறகு படத்தை அவர்தான் எடுத்தாரா என படம் பார்த்த ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு மிக மிக சொதப்பான திரைக்கதையை தந்திருந்தார்.
அதுவும் இரட்டை சகோதரன், சகோதரி, ஜாதகம், நரபலி போன்ற மூட நம்பிக்கையான விஷயங்களை, அதுவும் சிறுபான்மையின மக்களாக கருதப்படும் கிறிஸ்தவ கேரக்டரில் நடித்தவர்கள் மீது இப்படி ஒரு கருத்து திணிப்பை செய்தது, ஜோசப் விஜய் ஆன நடிகர் விஜய்க்கு படம் பார்த்த பிறகே, பெரிய உறுத்தலாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் அபார வெற்றி, டிக்கெட் வசூல் 461 கோடி ரூபாய் என்ற சாதனையை தொட்டிருந்தாலும், விஜயை பொருத்த வரை இந்த படத்தின் வெற்றி, அவருக்கு மிகப்பெரிய ஆத்ம திருப்தியை, சந்தோஷத்தை தரவில்லை. ஆரம்பத்தில் படத்தை கொண்டாடிய ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய், ஒரு கட்டத்துக்கு பிறகு லியோ படத்தில் உள்ள அதிகமான மைனஸ்களை பார்த்து, நொந்து போய் விட்டதாகவும் தெரிகிறது.
அதனால், லியோ 2 படத்தில் நடிக்க நிச்சயமாக ஒத்துக்கொள்வது இல்லை எனவும், லியோ கேமியோ அல்லது எல்சியு என எதுவாக இருந்தாலும் அதில் நடித்து தனது இமேஜை இனியும் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற உறுதியான முடிவை விஜய் எடுத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் சற்று கலக்கத்தில்தான் இருக்கிறார். அதனால், லியோ எல்சியு எடுக்கும் காலகட்டத்தில் விஜயை எப்படியும் சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்து விடலாம் என, அவரது நட்பு வட்டாரம் இயக்குநருக்கு தைரியப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.





