- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சியுடன் முதலில் கூட்டணி சேரும் முக்கிய கட்சி, பரபரப்பாக வெளியான தகவல் -...

நடிகர் விஜய் கட்சியுடன் முதலில் கூட்டணி சேரும் முக்கிய கட்சி, பரபரப்பாக வெளியான தகவல் – மதுரையில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் விஜய் கடந்தாண்டில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கினார். தொடர்ந்து கட்சி கொடியை கட்சி கொள்கை பாடலை அறிமுகப்படுத்திய அவர், கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். பல லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் திரண்டனர்.

தொடர்ந்து தவெக அரசியல் இயக்கத்தின் தலைவராக திமுக அரசை எதிர்த்து விமர்சித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், திமுக அரசை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும் திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் அவரே வெளிப்படையாக பேசி வருகிறார். அதே நேரத்தில் திமுக பாஜக என 2 கட்சிகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தங்களது கட்சியுடன் கூட்டணிக்கு வருமாறு அதிமுக சார்பில் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு அழைப்பு விடப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் தரப்பில் 2.5 ஆண்டுகளுக்கு துணை முதல்வர் பதவி, 2.5 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி என நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது நடிகர் விஜயை பொருத்த வரை அவருடன் கூட்டணி சேரும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் தவெக தலைமை சொல்லும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே தங்களுடன் இணைய முடியும் என்ற நிலையில் உள்ளனர். அதனால் தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் தவெக கட்சியின் 2வது மாநில அரசியல் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நாள் கேப்டன் விஜயகாந்த் அதாவது தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளாகும். அதே நேரத்தில் நடிகர் விஜய், சங்கீதாவின் திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பாக, தவெக கட்சியில் தேமுதிக கட்சி இணைந்து கூட்டணியாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதை அந்த மாநாட்டு மேடையில் விஜயும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்தும் இணைந்து அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது போக போகத்தான் தெரியும். ஏனெனில் பிரேமலதா விஜயகாந்த், விஜய் கட்சியின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவாரா என்பது சாத்தியமில்லை.

- Advertisement -

சற்று முன்