- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 100 கோடியை இப்படி யாராச்சும் செய்வாங்களா? தவெக தலைவர் விஜயை விளாசித் தள்ளும் நிதி...

ரூ. 100 கோடியை இப்படி யாராச்சும் செய்வாங்களா? தவெக தலைவர் விஜயை விளாசித் தள்ளும் நிதி வல்லுனர்கள் – தளபதிக்கு இது கூட தெரியலையே?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை விஜய் அதில் காட்டியிருக்கிறார். மேலும் விஜயின் போர்ட்ஃபோலியோவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை (சுமார் 17 சதவீதம்) வங்கி நிலையான வைப்புத் திட்டத்தில் அதாவது பிக்சட் டெபாசிட்டில் வைத்திருப்பதுதான் பேசுபொருளாக மாறி உள்ளது.

ஒரு மாஸ் லீடரின் இந்த முதலீட்டு அணுகுமுறை பாதுகாப்பானதாக தெரிந்தாலும், நவீன பொருளாதாரச் சூழலில் இது ஒரு முதலீட்டு சருக்கல் என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த 100 கோடி ரூபாய் எஃப்டி விமர்சிக்கப்பட காரணம் அதன் பின்னால் இருக்கும் பணவீக்கம் தான். எஃப்டி மூலம் கிடைக்கும் 6.5 சதவீதம் வட்டி வருமானத்தில் தற்போதைய 3 சதவீதம் பணவீக்கத்தை கழித்து பார்த்தால் உண்மையான லாபம் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே இருக்கும்.

- Advertisement -

இவ்வளவு பெரிய தொகையை வெறும் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டும் இலக்காக கொள்வது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவாக இருக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வரி சலுகை மற்றும் நீண்டகால வளர்ச்சியை கணக்கில் கொண்டால் இந்த தொகை தேக்கமடைந்து உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த 100 கோடி ரூபாயை இன்னும் ஸ்மார்ட் ஆக பிரித்து முதலீடு செய்து இருக்கலாம் என்றும் ஆலோசகர்கள் கருத்து கூறுகின்றனர்.

உதாரணமாக இதில் 50 கோடி ரூபாயை அரசு பத்திரங்கள் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால் எஃப்டியை விட கூடுதல் பாதுகாப்போடு வரி சலுகைகளை பெற்றிருக்கலாம். மீதம் 50 கோடி ரூபாயை சற்று ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால் காலப்போக்கில் அந்த பணம் பல மடங்கு பெருகி எஃப்டி வருமானத்தை விட பன்மடங்கு லாபத்தை தந்திருக்கும்.

- Advertisement -

ஒரு தேர்ந்த முதலீட்டாளராக இருந்தால் இத்தகைய பெரும் தொகையை ஹைபிரிட் பண்ட் போன்ற திட்டங்களில் பிரித்து முதலீடு செய்து அதில் எஸ் டபுள்யு பி அதாவது சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் வசதியை பயன்படுத்தி இருக்கலாம். இதன்மூலம் மாதந்தோறும் ஒரு நிலையான வருமானம் கைக்கு கிடைப்பதோடு மீதமுள்ள அசல் தொகை சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டே இருக்கும்.

100 கோடி ரூபாய் பணத்தின் பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக கருதி எஃப்டியில் முடக்கியுள்ள விஜயின் இந்த முடிவு அரசியலில் அவர் காட்டும் அதிரடிக்கு நேர் மாறாக முதலீட்டில் ஒரு பழமைவாத அணுகு முறையை பிரதிபலிக்கிறது. 100 கோடி ரூபாய் என்கிற பிரமாண்ட தொகையை அதிக லாபம் கிடைக்கும் வகையில் பயன்படுத்தாமல் வெறும் பாதுகாப்புக்காக மட்டுமே இப்படி பிக்சட் டெபாசிட் செய்திருப்பது விஜயின் பொருளாதாரம் குறித்த அறியாமையின் வெளிப்பாடு என்றும் நிதி வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்