- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை நான் அடிக்கிற அடி, மரண அடியா இருக்கும்- அரசியல் கட்சித் தொடங்குவதற்கு முன்...

இந்த முறை நான் அடிக்கிற அடி, மரண அடியா இருக்கும்- அரசியல் கட்சித் தொடங்குவதற்கு முன் விஜய் போட்ட பலே திட்டம், இனி எல்லா வீட்டுக்குள்ளும் விஜய் இருப்பாராம்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.

சமீப நாட்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வரும் செயல்களை வைத்து பார்க்கும்போது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் நிச்சயம் போட்டியிடுவார் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆதலால் விஜய், விரைவில் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது. சமீபத்தில் கூட விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் சந்திப்பு நடந்தது.

அதில் சமூக வலைத்தளங்களில் தலைவர்கள் பற்றியும் மற்ற நடிகர்களைப் பற்றியும் அவதூறாக பதிவிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

- Advertisement -

அதே போல் அந்த சந்திப்பில் சமூக வலைத்தளங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஐடி விங் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளையும் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினாராம். இவ்வாறு விஜய்யின் அரசியல் நகர்வு சூடுபிடித்துள்ளதாக பல பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் ஒரு பிரபலமான தொலைக்காட்சி சேன்னல் ஒன்றை விலைக்கு வாங்க உள்ளாராம்.

எப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சேன்னல் இருக்கிறதோ அதே போல் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் கொள்கைகளை பரப்பும் வகையில் அந்த சேன்னல் அமையுமாம். இதன் மூலம் மக்களிடையே நேரடியாக விஜய்யின் கட்சி சார்ந்த விஷயங்கள் சென்று சேரும் என கூறப்படுகிறதாம்.

- Advertisement -

சற்று முன்