நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போது தனது 69வது படத்தில் அவர் நடித்து வருகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சி தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். கட்சி துவங்கி ஓராண்டு ஆன நிலையில் 20 சதவீத ஓட்டுகள் அவருக்கு இப்போதே தயாராக இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 90 லட்சம் பேர் டிவிகே கட்சியிலும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
நடிகர் விஷால் நடிப்பில் பெரிய வெற்றியை பெற்ற படம் சண்டக்கோழி. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி டைரக்ட் செய்திருந்தார். ராஜ்கிரண், விஷாலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். மீரா ஜாஸ்மின் அமீர் ஜான் குமரவேல் விதார்த் லால் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படமாகவும் சண்டக்கோழி அமைந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லிங்குசாமி, சண்டக்கோழி படம் குறித்து கூறியதாவது, சண்டக்கோழி படத்தின் கதையை நடிகர் விஜயிடம் நேரில் சந்தித்து சொன்னேன். பாதி கதையை மட்டும் கேட்டவர் மீதி கதையை கேட்க மறுத்துவிட்டார். காரணம் மீதிக்கதையில் தான் ராஜ்கிரண் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ராஜ்கிரண் படத்துக்குள் வந்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று விஜய் கூறிவிட்டார்.
அடுத்து நடிகர் சூர்யாவிடம் சண்டக்கோழி படத்தின் கதையைச் சொன்னேன். அவரும் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் விஷாலை இந்த படத்தில் நடிக்க வைத்தேன். சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜயை சந்தித்தேன். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாவது பாதி கதையை நீங்கள் கேட்கவே இல்லையே என்றேன்.
அந்தப் பையன், (விஷால்) இந்த துறைக்கு வரவேண்டும் என்று இருக்கிறது. அவருக்கு பொருத்தமான கதை இது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று விஜய் சொன்னார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார் ஆனால் நடிகர் ராஜ்கிரணுக்கு பாதுகாவலராக நடிகர் விஜய் காவலன் என்ற படத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக நடிகை அசின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் பிளாப் ஆகிவிட்டது.





