தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். கடந்த ஆண்டில் விக்கிரவாண்டியிலும் அதைத் தொடர்ந்து மதுரையிலும் தனது கட்சியின் 2 அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கின்றார். அடுத்த மாநாடு கோவையில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மதுரை வழியாக கொடைக்கானலுக்கு நடிகர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்புக்கு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய், நான் இப்போது படப்பிடிப்புக்கு செல்கிறேன். அதனால் மதுரையில் யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதல் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார். செய்தியாளர்களை சந்திக்க பயப்படுகிறார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அந்தளவுக்கு தன்னிடம் அரசியல் அறிவு இல்லாததால் பிரஸ்மீட் வைக்காமல் இருக்கிறார் என்ற ஒரு விமர்சனம் தவெக கட்சியின் தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் மீது இருந்து வருகிறது. நடிகர் விஜய் பிரஸ் மீட் வைக்காமல் தவிர்ப்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து கூறியதாவது, விஜயகாந்த் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்கும் போது அவரை சீண்டி சீண்டி வேறு மாதிரி அவரை கொண்டு போய் விட்டார்கள். அது ஒரு அனுபவம். விஜயகாந்திடம் இருந்து விஜய் கற்றுக்கொண்ட அனுபவம் அதுதான். அவருக்கு ஏற்பட்டது எனக்கு ஏற்படக் கூடாது.
நீங்க வந்து ஒரு 50 பேர் கூடி நின்றுக்கொண்டு என்கிட்ட கேள்வி கேட்க அதுவும் எனக்கு தெரியாத விஷயங்களை பற்றி கேட்க நான் திணறுவதை திரும்ப திரும்ப போட்டுக் காட்டி, எனக்கு ஒரு இமேஜை நீ ஏற்படுத்துவே இல்லே? அதுக்கு நான் இடம் கொடுத்தா தானே அது நடக்கும்? அதனால் அதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அதாவது நடிகர் விஜயை ஒரு அரசியல் தலைவர் என்ற கோணத்தில் மக்களிடம் கொண்டு செல்லாமல், அவரை தகுதியற்ற ஒருவராகவும் மோசமாக சித்தரிக்கும் விதமாகவும் கேள்விகளை எழுப்பி கோபப்படுத்தி வேண்டும் என்றே சீண்டுகிற வகையில் பேசி மோசமான இமேஜை உருவாக்கி விட வாய்ப்புள்ளதால் தான், நடிகர் விஜய் பிரஸ்மீட்டை தவிர்க்கிறார். அது கேப்டனுக்கு ஏற்பட்ட அனுபவம் மூலம் விஜய் கற்றுக்கொண்ட பாடம் என்று அந்தணன் விளக்கமாக கூறியிருக்கிறார்.





