தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஆனால் தனது 69வது படம் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொன்ன அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். வருகிற 2026ம் ஆண்டில் நான்தான் முதல்வர் என்றும் சவாலாக கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு நடிகை திரிஷாதான் முக்கிய காரணம் என்றும் கில்லி திருப்பாச்சி ஆதி குருவி போன்ற படங்களில் நடித்த போதே விஜய்க்கும் திரிஷாவுக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் அதை விஜயின் மனைவி சங்கீதா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்க கூடாது என்று விஜயை சங்கீதா தடுத்தும் அவர் அதை கேட்காமல் திரிஷாவுடன் நடித்ததாகவும், அதிலும் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்தததால் ஆத்திரமடைந்த சங்கீதா, நடிகர் விஜயை பிரிந்து லண்டனில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு தனது மகளுடன் சென்றுவிட்டதாகவும் தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே அவரது மனைவி சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை. அதுவும் புஸ்லி ஆனந்துடன் விஜய் நெருக்கம் காட்டுவதும் சங்கீதா, விஜயை பிரிந்து செல்ல மற்றொரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது மீண்டும் ஒரு சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சமீபத்தில் சத்தியபாமா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் பேத்திக்கு திருமண வரவேற்பு விழா நடந்தது. அதில் நடிகர் விஜய் பளபளக்கும் பட்டு வேட்டி சட்டையில் கையில் பூங்கொத்துடன் வந்து கலந்துக்கொண்டார். அந்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதே திருமண வரவேற்பு விழாவுக்கு விஜயின் மனைவி சங்கீதாவும் நேரில் வந்து கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஒரே திருமண விழாவுக்கு கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வந்ததன் மூலம் அவர்கள் பிரிந்துதான் வாழ்கின்றனர் என்ற தகவல் உறுதியாகி விட்டதாக இணையத்தில் பரபரப்பாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் தங்களது மகளின் படிப்புக்காக விஜயின் மனைவி லண்டனில் தங்கியிருக்கிறார் என்று விஜய் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என புரியாமல் தளபதி ரசிகர்களும் தவெக கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.





