- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவுக்கு முற்றுப்புள்ளி இல்லை - மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடிவெடுத்த தளபதி - அதுதான் காரணமா?

சினிமாவுக்கு முற்றுப்புள்ளி இல்லை – மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடிவெடுத்த தளபதி – அதுதான் காரணமா?

- Advertisement -

நடிகர் விஜய் 33 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சில படங்களில் அவர் நடித்த போது உருவக்கேலி செய்தனர். ஆனால் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் லவ் டுடே போன்ற படங்களில் நடித்த பிறகு விஜய் முன்னணி ஹீரோவாக மாறிவிட்டார்.

பிறகு கில்லி துப்பாக்கி போக்கிரி கத்தி போன்ற படங்களில் நடித்த விஜய் மாஸ் ஹீரோவாக உச்ச நட்சத்திரமாக மாறினார். இப்போது தமிழ் சினிமாவில் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய நடிகராக இருப்பது விஜய் மட்டும்தான். ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்களே இன்னும் சம்பளம் 200 கோடி ரூபாயை எட்டவில்லை.

- Advertisement -

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நடிகர் விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை. ஜனநாயகன் படம்தான் எனது கடைசி படம் என்று அறிவித்தார். முழுநேரமும் அரசியல்தான் இனி என் பயணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் நடிக்கும் முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த பொங்கலுக்கு அறிவித்தபடி வெளியாகவில்லை. சென்சார் பிரச்னை காரணமாக இன்னும் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் எச்டி தரத்தில் ஜனநாயகன் படம் 2 தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி விட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பே இப்படி ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது மிகப்பெரிய அதிர்ச்சியை கோலிவுட் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இதனால் பலத்த குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்த தவறை செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ஜனநாயகன் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை சரிசெய்யும் விதமாக, அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து தர விஜய் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது கடைசி படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் சந்தோஷமாக அதை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் தளபதி விஜய் இப்படி ஒரு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்