- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதுக்குள்ள 50 படம் நடிச்சிட்டாரா? வெளியான விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் பெயர் -...

அதுக்குள்ள 50 படம் நடிச்சிட்டாரா? வெளியான விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் பெயர் – அவரே வெளியிட்ட போஸ்டர் இதோ

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் கூத்துப்பட்டறையில் பயின்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பின்னணி நடிகராக தனது வாழ்க்கையை துவங்கினார். புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் துணை நடிகராக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் கதாநாயகனாக அவரை உயர்த்தியது.

சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான அந்த படம் தேசிய விருதினையும் வென்று அசத்தவே விஜய் சேதுபதியின் மீது தமிழ் சினிமாவின் மற்ற இயக்குனர்களின் பார்வை பட்டது. அதன் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்த வெற்றி படங்களை தர ஆரம்பித்த அவர் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

அதன் பிறகு இளைய தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் என ஜாம்பவான் நடிகர்களுக்கு எதிராக வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றார். அது தவிர்த்து தற்போது அட்லியின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானின் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படி மிகச் சிறந்த நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தன்னுடைய ஐம்பதாவது படத்தின் தலைப்பினை நேற்று மாலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார்.

குரங்கு பொம்மை பட புகழ் சாமிநாதன் இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து விஜய் சேதுபதியின் இந்த ஐம்பதாவது படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு “மகாராஜா” என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரையும், டைட்டிலையும் நேற்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அதனை விஜய் சேதுபதியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, அருள் தாஸ், முனிஸ்கான், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்த வேளையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்