- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் கதையை சொல்லும்போதே எனக்கு அப்படி தோன்றியது - டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து மனம்...

இயக்குனர் கதையை சொல்லும்போதே எனக்கு அப்படி தோன்றியது – டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை சிம்ரன்!

- Advertisement -

ஒரு நல்ல படம் அதற்கான வெற்றியை தானே தேடிக்கொள்கிறது என்று கோலிவுட் சினிமா வட்டாரத்தில் ஒரு பொன்மொழி உண்டு, அப்படி தான் சில நல்ல படங்கள் தானாக அதற்கான வெற்றியை தக்க வைத்துக்கொள்கின்றன. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றி அப்படிதான் இருக்கிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. 24 வயது இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே தன் வெற்றி முத்திரையை ஆழமாகவும் பதித்திருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து 5 வாரங்கள் கடந்தும் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் சசிக்குமார் மற்றும் நடிகை சிம்ரனுக்கு இந்த படம் சூப்பர் கம்பேக் தந்திருக்கிறது. அயோத்தி படத்துக்கு பிறகு இந்த படம் சசிக்குமாரை மீண்டும் ஜெயிக்க வைத்திருக்கிறது. சிம்ரனுக்கு அந்தகன் குட் பேட் அக்லி படங்களின் வரிசையில் 3வது வெற்றிப்படமாகவும் இது உள்ளது.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் அசத்தலான வெற்றி குறித்து நடிகை சிம்ரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் நடிக்கும் படங்களில் பொதுவாக என் கேரக்டருக்கு கிரடிட் வரணும் என்று நான் நினைப்பேன். டூரிஸ்ட் பேமிலி படத்தை தியேட்டரில் போய் பார்த்தபோது ரசிகர்கள் தந்த ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போனேன்.

- Advertisement -

எந்த படம் பண்ணினாலும் ரசிகர்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த படத்தின் கதை நன்றாக இருந்ததால் வெற்றி பெற்றது. நான் ஒரு படத்தில் நடிக்கும் போது பெரிய ஹீரோ பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதையெல்லாம் பார்க்கவே மாட்டேன். கதைையும் என் கேரக்டரையும் மட்டும் தான் பார்ப்பேன்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொல்லும்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என எனக்கு தோன்றியது. என்னிடம் கதையை எப்படி சுவாரசியமாக சொன்னாரோ அப்படியே இயக்குனர் படத்தையும் எடுத்துள்ளார். எல்லோரும் தியேட்டரில் சிரிக்கிறாங்க, அழுகிறாங்க. எமோஷனலாக பீல் பண்றதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மைதான் இந்த படம் என்று நடிகை சிம்ரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்