- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் விஜய் சேதுபதி பா ரஞ்சித் போன்றவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டுமா? -...

வெற்றிமாறன் விஜய் சேதுபதி பா ரஞ்சித் போன்றவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டுமா? – என்ன கொடும சார் இது…?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் பேட் கேர்ள் என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் காட்சிகளில் பள்ளி மாணவிகளை தவறாக சித்தரித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு கூறுகின்றனர். அந்த வகையில் அகில இந்திய நாடா கூட்டமைப்பு சார்பில் கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் அந்த அமைப்பு கூறியிருப்பதாவது, பேட் கேர்ள் படத்தில் இந்து பிராமண சமூக கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் பிராமண பெண் குழந்தைகளை, சிறுமிகளைப் பற்றி தவறான கருத்தை பரப்பும் வகையிலும் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம், 18 வயது பூர்த்தியடையாமல் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் சுதந்திரம், சிறுமிகளின் தற்கொலை மிரட்டல் காட்சிகள் அந்த டீசரில் வெளியாகி உள்ளன. அதேபோல் படிக்கும் பெண் குழந்தைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது சரி என்று பெற்றோரிடம் வாதம் செய்வதையும், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை கண்டிப்பதை அராஜகம் என்றும் சித்தரிக்கும் வகையிலும் இதில் காட்சிகள் உள்ளன.

இந்து பெண் குழந்தைகளை தவறாக வழிநடத்தும் இந்த படம் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு திரைப்படமாகும். மேலும் இந்த படத்தை புகழ்ந்து பேசிய இயக்குனர்கள் வெற்றிமாறன் பா ரஞ்சித் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பெண் விடுதலை என்ற பெயரில் இந்த படத்தை புரட்சி படம் என்று கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தை தயாரித்தவர்கள் நடித்தவர்கள் இயக்கியவர் உள்ளிட்டோர் குடும்பங்களில் அவர்கள் வீட்டு பெண் குழந்தைகளை இதுபோன்று தவறு செய்து கெட்டுப் போவதை அனுமதிப்பார்களா? வேண்டுமென்றே தமிழர்களின் குடும்ப அமைப்பை சீர்குலைக்கும் வகையிலும், பெற்றோர் குழந்தைகள் உறவை கெடுக்கும் வகையிலும், பள்ளிக்கூடம் கல்விச் சூழல் ஆகியவற்றை சிதைக்கும் வகையிலும் இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்த படத்தை உடனடியாக தடை செய்வதோடு இந்த படத்தை தயாரித்தவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இயக்குனர் பா ரஞ்சித் வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி போன்றவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற புகார் மனு இந்து மக்கள் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்