- Advertisement -
Homeபொழுதுபோக்குவித்யாசமான பிரமோ மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - ஆளும்...

வித்யாசமான பிரமோ மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்கிறாரே? – பிக்பாஸ் கமல்ஹாசனையே மிஞ்சி விடுவாரோ…?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இருந்து கடந்த ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன்தான், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு, அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தார். பிக்பாஸ் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் இருந்தார் என்பது மிக முக்கியமானது.

ஏனெனில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அவர் வந்தாலும் அந்த ஒரு வாரத்துக்கான வைப்பை அந்த 2 நாட்களில் அவர் ஏற்படுத்தி விடுவார். வீட்டுக்குள் நடந்த பஞ்சாயத்துக்களை அவரது பாணியில் கேள்வி கேட்டு, தவறு செய்தவர்களை கிடுக்கிப்பிடி போட்டு திணற வைப்பார். நாசூக்காக பேசினாலும், அதில் பொடி வைத்து பேசுவதில் கமல் வார்த்தை ஜாலம் காட்டுவார்.

- Advertisement -

அதனால் வாரத்தில் 5 நாட்கள் பிக்பாஸ் பார்க்காமல் தவற விடுபவர்கள் கூட, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடிகர் கமல் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தவற விடாமல் பார்த்து விடுவார்கள். அதில் அவர் எலிமினேட் ஆனவர்களை சஸ்பென்ஸ் வைத்து வெளியேற்றுவது, ஏதோ ஒரு தருணத்தில் சட்டென ஒரு போட்டியாளரை நீங்க இந்த வாரம் ஷேப் என்று சொல்வது, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என, பரபரப்பான போட்டியாளரை திடீரென வெளியேற்றுவது என பல விதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சுவாரசியமாக கொண்டு சென்றார்.

ஆனால் இப்போது கமல்ஹாசன் இடத்தில், மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்துவிட்டார். இனி அவர்தான் கமல்ஹாசன் செய்த பணிகளை தொடரப் போகிறார். நடிப்பில் அசகாய சூரராக இருந்தாலும், அனுபவத்தில் பழுத்தவரான கமல் அளவுக்கு இவர் சுவாரசியமாக நிகழ்ச்சியை நடத்துவாரா என்ற கேள்வி விஜய் டிவி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் நேற்று வெளியான பிக்பாஸ் சீசன் 8 பிரமோ வீடியோவில், ஆரம்பமே அசத்தல் என்று சொல்லும் அளவுக்கு மிக வித்யாசமான கெட்டப்புகளில் பொதுமக்கள் மத்தியில் அட்வைஸ் கேட்கும் பிக்பாஸ் தொகுப்பாளராக தன் அற்புதமான பணியை துவங்கி விட்டார் விஜய் சேதுபதி. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என அவர் சொல்லும் அந்த தோரணையிலேயே பிக்பாஸ் போட்டியாளர்களை கதற விடுவார் என்று ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.

அதனால் நடிகர் கமல்ஹாசன் அரசியல் இயக்க தலைவராகவும், சொந்த வாழ்க்கையில் பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர். அந்த வகையில் விஜய் சேதுபதி, எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலையாளராக, சொந்த வாழ்க்கையில் விமர்சனங்களுக்கு ஆளாகாத மனிதர் என்பதால் எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் அவரால் டீல் பண்ண முடியும். அதனால் கமல் எடுக்க தயங்கிய சில முடிவுகளை கூட விஜய் சேதுபதி அசால்ட்டாக எடுத்து, நிகழ்ச்சியில் அடித்து ஆடி விளையாடுவார் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்