தமிழ் சினிமாவின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் முன்னணி நட்சத்திரமாக வளர்வதற்கு, ஆரம்பத்தில் அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிதும் உதவின. பிறகு தர்மதுரை நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் வளர்ந்த அவர், இப்போது ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை எடுத்த நிகிலன் இயக்கி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. மகாராஜா என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்னும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இதனுடைய கதாநாயகன் மட்டுமல்லாமல், வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வந்தார். அவர் பேட்ட திரைப்படத்தில், ரஜினிக்கு வில்லனாக அறிவிக்கப்பட்டு அந்தப் பயணத்தை தொடங்கினார். ஆனால் அதில் அவரது கதாபாத்திரம் டம்மியாக இருந்தது விஜய் சேதுபதி ரசிகர்களை வருத்தமடைய செய்தது.
இப்படியான சூழலில், விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், பலரது பாராட்டையும் பெற்றார். அடுத்ததாக விக்ரம் திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் சந்தானம் கதாபாத்திரம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.
சமீபத்தில், சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் வில்லனாக பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவரின் கதாபாத்திரம் படத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சில படங்களில் அவரது ரோல் டம்மியாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படியான சூழலில், இனிமேல் தான் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதில்லை என்று உறுதியாக கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், youtube சேனலுக்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
இனிமேல் நான் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். முதலில் இது போன்ற கதாபாத்திரங்கள் ஆடியன்ஸ்களை உற்சாகப்படுத்தும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதன் மூலம் எந்த ஒரு தாக்கமும் ஏற்படவில்லை. இப்போதெல்லாம் கேமியோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. சமீபத்தில் இது போன்ற கதாபாத்திரமுள்ள 10 20 கதைகளை நான் தவிர்த்து இருப்பேன். கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இதை நான் கூறினேன். இப்போதும் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.





