- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக தரத்தில் உருவான ஒரு தமிழ் சினிமா; இப்படி பாராட்டப்பட்ட விஜய் சேதுபதியின் 50வது படம்...

உலக தரத்தில் உருவான ஒரு தமிழ் சினிமா; இப்படி பாராட்டப்பட்ட விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா – ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் உலக அளவில் திரும்பி பார்க்கப்பட்ட படங்கள் எப்போதாவது அத்தி பூத்தது போல் வருவதுண்டு. ஏனென்றால் கதையை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் காணாமல் போய், ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் அதிகமாகி விட்டனர். குப்பை கதைகளை கமர்ஷியல் என்று பெயரில் படமாக்கி தள்ளுகின்றனர்.

எது தரமான படம், எப்படிப்பட்ட படங்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு இல்லாத ரசிகர் கூட்டம், தங்களுக்கு பிடித்த இயக்குனர், தங்களுக்கு பிடித்த நடிகர், தங்களுக்கு பிடித்த நடிகை என்பதற்காக அத்தகைய குப்பை படங்களை பார்க்கச் சென்று, அந்த படங்களை வசூலில் ஜெயிக்க வைத்து விடுகின்றனர்.

- Advertisement -

இப்படி கணிசமான லாபம் கிடைக்கும் கமர்ஷியல் குப்பை படங்களை தரும் இயக்குனர்கள், இதுதான் சரியான ரூட் என்று நம்பி, அத்தகைய மோசமான படங்களை திரும்ப திரும்ப தருகின்றனர். இத்தகைய கமர்ஷியல் குப்பை படங்கள் அதிக லாபத்துடன் ஓடுவதால், அடுத்தடுத்த இயக்குனர்களும், நடிகர்களும் இதுபோன்ற குப்பை படங்களையே தர முன்வருவதால் ஒரு கட்டத்தில், இதுதான் தமிழ் சினிமா டிரண்டிங் என்ற அவல நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு உதாரணமாக, தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 115. இதில் சொல்லிக்கொள்ளும்படியான மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் ஸ்டார், அரண்மனை 4, கருடன் மற்றும் மகாராஜா ஆகிய 4 படங்கள் மட்டும்தான். வடக்குப்பட்டி ராமசாமி, ப்ளு ஸ்டார், மிஷன் சேப்டர் 1, லவ்வர் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களாக இருந்தன.

- Advertisement -

இந்த சூழலில் கடந்த மாதத்தில் வெளியான படம்தான் மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா. ஏற்கனவே குரங்கு பொம்மை என்ற படத்தை நித்திலன் இயக்கிய நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய 2வது படம் இது. நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப், மணிகண்டன், சிங்கம்புலி, முனிஷ்காந்த், அருள்தாஸ், மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, தேனப்பன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மகாராஜா படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், இந்த படம் ரசிகர்களை ஒரு விதத்தில் திக்குமுக்காட செய்த படம் என்றே கூறலாம். படம் முழுவதும் எதிர்பாராத டிவிஸ்ட்டுகளை கொண்ட இந்த படம், ஒரு ரசிகனை முழு அளவில் திருப்தி செய்த உலக தரத்திலான தமிழ் படம் என்று பாராட்டப்பட்டது. வரும் 12ம் தேதி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்