தமிழ் சினிமாவில் எப்போதும் ஜாலியான காமெடியான காதல் படங்களுக்கு ரசிகர் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. அந்த காலத்திலேயே காதலிக்க நேரமில்லை என்ற இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்போதும் காதலிக்க நேரமில்லை படத்தை பார்க்க தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
முத்துராமன் ரவிச்சந்திரன் டி எஸ் பாலையா நாகேஷ் ராகவன் காஞ்சனா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜாலியான காமெடியான காதல் படமாக இருந்தது. சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன், மேட்டுக்குடி போன்ற காமெடி நிறைந்த ஜாலியான காதல் படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் எம் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் காமெடி நிறைந்த ஜாலியான காதல் படங்களாக இருந்தன.
இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன. இதில் நடிகர் சந்தானம் நடிப்பு பெரிய அளவில் 3 படங்களின் வெற்றிக்கும் வொர்க் அவுட் ஆனது. இப்போது சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகத்தை எடுக்க படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் தயாராகி விட்டார். இதுகுறித்து நடிகர் ஜீவாவிடமும் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார். சந்தானம் இப்போது ஹீரா ஆகிவிட்டதால், எஸ் எம் எஸ் 2ம் பாகம் படத்தில் சந்தானம் கேரக்டரில் யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் ஆர்யா, சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இப்போது இந்த படத்தையும் 2ம் பாகமாக எடுக்க எம் ராஜேஷ் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளையும் துவக்கி விட்டார். ஆனால் இந்த படத்தில் சந்தானம் நடித்தால் மட்டுமே படம் மிகப்பெரிய கவனத்தையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெறும் என்பதால் நிச்சயமாக இந்த படத்தில் ஆர்யாவுடன் சந்தானமும் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படத்தை இயக்கியவர் எம். ராஜேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சூப்பரான வெற்றிப் படங்களை கொடுத்த எம் ராஜேஷ், பிரதர் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டார். இந்த படம் படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டது.
அதனால் தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை 2ம் பாகமாக எடுக்க தயாராகி வரும் இயக்குனர் ராஜேஷூக்கு ரசிகர்கள் பலரும், பிரதர் படம் மாதிரி இந்த படத்தையும் சொதப்பி விடாதீர்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை ஒரு நல்ல படமாக 1ம் பாகம் மாதிரியே 2ம் பாகத்தையும் சிறப்பான படமாக கொடுங்க, ஜாலியான கலகலப்பான படமாக கொடுங்க என்று கெஞ்சாத குறையாத இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




