நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். விஜய் நடித்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஜெயராம் நடித்த காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
இந்த படத்தில் இன்னும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே, மீதமுள்ள வகையில் அவையனைத்தும் பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோட் படப்பிடிப்புக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலாகல், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தக் கூடாது என பாண்டிச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நோட்டீஸ் விட்டுள்ளார்.
அதாவது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்த கோட் படப்பிடிப்புக் குழுவினர் முறைப்படி அனுமதி வாங்கிதான் நடத்தியுள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்கிய போது, அப்போது வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அப்போது அந்த பகுதியில் அதிர்வேட்டுகளாக, பயங்கர சத்தமாக இருந்துள்ளது.
இதனால் ஷூட்டிங் நடந்த பகுதிக்கு அருகில் இருந்தவர்கள், வசிப்பவர்கள் பயங்கர சத்தத்தால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து எழுந்த புகாரை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் வெடிபொருட்களை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை என்ற காரணத்துக்காக கோட் படப்பிடிப்பு குழுவுக்கு, கலெக்டர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதுவும் இரவு நேரங்களில் படம்பிடிக்கப்பட்ட சண்டை காட்சிகளில், வெடிபொருட்களை பயன்படுத்திய நிலையில், இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பதால், அவர் மூலம் இந்த பிரச்னை இப்போது கையாளப்பட்டு வருவதால், விரைவில் சுமூகமாக இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.
மேலும், பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜயுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால், விஜய் இதில் ஒருவார்த்தை சொன்னால் உடனுக்குடன் தடை நீங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கும்போது, இதுபோன்ற வெடிபொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை முறையாக வாங்க வேண்டும் என்பது முன்பே தெரியாதா என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





