நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக உச்சத்தில் இருக்கிறார். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். மிக விரைவில் கட்சிக்கான அடுத்த கட்ட பணிகளை துவங்க இருக்கிறார்.
குறிப்பாக மதுரையில் மாநாடு, கட்சி கொடி அறிமுகம், கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், அரசியல் பணிகள் குறித்த பல்வேறு விஷயங்களை அந்த மாநாட்டில் நடிகர் விஜய், அதிகாரபூர்வமான தகவல்களை அறிவிக்க இருக்கிறார்.
இப்போது நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விசிலை போடு என்ற பாடல், புத்தாண்டு அன்று வெளியானது. இந்தப் பாட்டை இதுவரை 30 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாடல் குறித்து மோசமான விமர்சனம் இருந்தாலும், 30 மில்லியன் பேர் இந்த பாடலை பார்த்துள்ளனர் என்பது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது.
இந்நிலையில், முன்னணி நடிகர்கள் நடித்த பழைய ஹிட் படங்கள் இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம், வரும் 20ஆம் தேதி தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களுக்கு கில்லி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா, முத்துப்பாண்டி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தாமு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக அப்போது வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர் டைரக்டர் தரணி. இந்த படத்துக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இந்த படத்தில் இடம்பெற்ற கொக்கர கொக்கரக்கோ, அர்ஜுனரு வில்லு, அப்படி போடு போடு போடு போன்ற பல பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவை.
இந்நிலையில், நடிகர் விஜய் என்றாலே மாஸ் வசூல் என்பது தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. அந்த வகையில் வரும் 20 தேதி ரிலீஸ் ஆகும் விஜய் நடித்த கில்லி படத்துக்கு ப்ரீ புக்கிங் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல், பாக்ஸ் ஆபீஸில் ப்ரீ புக்கிங் நடந்துள்ளது. ரி ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்திற்கு இப்படி ப்ரீ புக்கிங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டிக் புக்கிங் ஆனது, நடிகர் விஜய் நடித்த கில்லி படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது.





