- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிகாலை 4 மணி காட்சி... 4 நாட்களுக்கு முன்னதாகவே கட்-அவுட்... லியோ கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை ஓரங்கட்டிய...

அதிகாலை 4 மணி காட்சி… 4 நாட்களுக்கு முன்னதாகவே கட்-அவுட்… லியோ கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை ஓரங்கட்டிய கேரள தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் தற்போது உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது லியோ படத்தின் ரிலீஸைதான். இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படைப்புதான் இந்த லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

லியோவின் விஜய்க்கு இரண்டு விதமான கேரக்டர்களை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார். ஒன்று நாம் ட்ரெய்லரிலேயே பார்த்தது போல் காஷ்மீரில் குடும்பத்துடன் அமைதியாக வாழும் பார்த்தி காப்பாத்திரம். மற்றொன்று, போதை கும்பலின் தளபதியாக விளங்கும் லியோ கதாபாத்திரம். இதில் பார்த்தி விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

- Advertisement -

மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமைதியாக வாழும் விஜயை, வில்லன் கும்பல் சீண்டுவது போல ட்ரெய்லரில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. சஞ்சய் தத்தும், அர்ஜுனும் இதில் முக்கிய வில்லன்களாக உள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேலனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.

லியோவில் இருந்து மொத்தம் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளது. இதில் நான் ரெடி தான் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்து youtube-யில் பத்து கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இன்னொரு பாடலான பேடாஸ், விஜய்க்கு ரொம்ப பிடித்தமான பாட்டு என்று அதன் பாடல் ஆசிரியர் விஷ்ணு எடவன் தெரிவித்தார்.

- Advertisement -

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் திரைப்படத்திற்கு 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும், அதிகாலை காட்சிகள் இல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைநகரான சென்னையிலும் முக்கிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்காததால் ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

அதேசமயம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவின் பல்வேறு பகுதிகளும் லியோ கொண்டாட்டம் இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவு ரசிகர்கள் உள்ளது பலருக்கும் தெரிந்ததே. லியோ ரிலீஸுக்காக காத்திருக்கும் அவர்கள், திரையரங்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்போதே திரையரங்களில் விஜய்க்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சாலையில் பேரணியாகவும் சென்று கொண்டாடி வருகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக, இன்னும் இங்கு முன்பதிவு கூட செய்ய முடியவில்லை என்று தமிழ்நாடு தளபதி ரசிகர்கள் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்