- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் அடுத்த பிளாக் பஸ்டர் திரைப்படம்... கில்லியின் சாதனையை இது...

மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் அடுத்த பிளாக் பஸ்டர் திரைப்படம்… கில்லியின் சாதனையை இது முறியடிக்குமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இதற்குக் காரணம், சொல்லிக் கொள்ளும்படியான பெரிய ஹீரோக்கள் திரைப்படம் ஏதும் வெளியாகவில்லை. அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டாலும் அது பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இதனால் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் வரவழைக்க முன்னணி ஹீரோக்கள் நடித்த பழைய படங்களை மீண்டும் வெளியிடும் முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் வந்தனர்.

 

- Advertisement -

இந்த யுக்தி அவர்களுக்கு கை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். முதலில் இது ஆரம்பித்தது சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தான். தொலைக்காட்சியில் இந்த திரைப்படத்தை பலமுறை ஒளிபரப்பி இருந்தாலும், 2கே கிட்ஸ்கள் இந்த திரைப்படத்தை பார்க்க முனைப்பு காட்டியதால் திரையரங்குகளில் கூட்டம் அள்ளியது.

 

- Advertisement -

ஆனால் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே இந்த திரைப்படம் வெளியானதால், வாரணம் ஆயிரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அடுத்ததாக, தனுஷின் 3 திரைப்படமும் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அந்த படத்தின் பாடல்களை, ரசிகர்கள் திரையரங்குகளில் பாடி வைப் ஆகினர்.

 

இப்படி ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால், ரஜினியின் முத்து, கமல்ஹாசனின் ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டன. ஆனால் இதற்கெல்லாம் பெரிய வரவேற்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் தளபதி விஜய் நடிப்பில் கில்லி திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது.

 

இது முதலில் வெளியான திரைப்படமா? அல்லது ரீலீஸ் படமா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தனர். எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் அலைமோத, முன்பதிவுகளும் அமோகமாக நடைபெற்றது. விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் அமைந்தது.

 

கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் குவித்த திரைப்படங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் கில்லி திரைப்படம் முன்னேறியதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறினர். இந்த நிலையில் தற்போது, விஜயின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த துப்பாக்கி படமும் மீண்டும் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனேகமாக விஜய்யின் பிறந்த நாள் 21ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்