நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நடிகை மமிதா பைஜூவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் விஜய், கோவாவில் நேற்று நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இப்போது கோவாவுக்கு நடிகர் விஜயும், திரிஷாவும் தனி விமானத்தில் ஒன்றாக பயணித்து சென்ற தகவல் இப்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திரிஷா. தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார். மேலும் தி கோட் படத்தில் விஜயுடன் உதட்டு முத்தக் காட்சியிலும் நடித்திருந்தார். பல நடிகர்களுடன் திரிஷா நடித்திருந்தாலும் விஜய்க்கும், திரிஷாவுக்கும் நெருக்கமான நட்பு உள்ளதாக பல ஆண்டுகளாக சர்ச்சை இருந்து வருகிறது.
நடிகை திரிஷா வீட்டில் ஒருமுறை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் பிடிபட்டது. அப்போது அந்த வைர நெக்லஸ், நடிகர் விஜய் எனக்கு பரிசாக அளித்தது என திரிஷா கூறியதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவல் பரவி வைரலானது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், இப்போதும் நடிகை திரிஷாவுடன் நெருங்கிய நட்பில் இருப்பதை உறுதிபடுத்தும் விதமான சம்பவம் தற்போது நடந்துள்ளது. நேற்று கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு நடிகர் விஜய், நடிகை திரிஷா மற்றும் அவர்களுடன் ஜெகதீஷ், ராஜேந்திரன், வேலு தேவராஜ், ரூபியீக்கா ஆகிய 6 பேர் தனி விமானத்தில் சென்றுள்ளனர்.
கோவாவில் விமான நிலையத்தில் இருந்து முதலில் வெளியேறும் விஜய், கருப்பு நிற கோடுகள் போட்ட சட்டையணிந்து காணப்படுகிறார். அவருக்கு பின்னால் வரும் திரிஷா வெள்ளை டாப் அணிந்த நிலையில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்துள்ளார். முதலில் விஜய் காரில் ஏறிக்கொள்ள பிறகு, திரிஷாவும் அதே காரில் பின்னால் ஏறிக்கொள்கிறார். இருவரும் ஒரே காரில் ஏறி பயணிக்கின்றனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ : https://x.com/imNAyrus/status/1867263653260443675





