- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் அடுத்த படத்தில் இத்தனை சண்டைக் காட்சிகளா?... வெங்கட் பிரபுவின் தரமான ஸ்கெட்சால் ஆடிப் போன...

விஜய்யின் அடுத்த படத்தில் இத்தனை சண்டைக் காட்சிகளா?… வெங்கட் பிரபுவின் தரமான ஸ்கெட்சால் ஆடிப் போன கோலிவுட் திரையுலகம்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் நல்ல முணுமுணுக்கும் ரகத்தில் உள்ளது. திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் அதன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் தவிர கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே மாஸ்டர் படத்தில், விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சொல்லி அடித்து வெற்றியைப் பெற்றதால், லியோவின் ரிலீஸ் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படமும் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே லியோ படம் வெளியாவதற்கு முன்பாகவே, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தளபதி விஜய்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்குகிறார். புதிய கீதைக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்களாம். தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் என இரண்டு பேர் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கிறார்களாம். இதுபோக, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது. இதில் வில்லனாக மைக் மோகனை வெங்கட் பிரபு தேர்வு செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படபூஜை சிம்பிளாக நடைபெற்றது.

தற்போது, படத்திலிருந்து முதல் பாடல் காட்சி படமாகி இருக்கிறார்களாம். ராஜூ சுந்தரம் இதில் நடன இயக்குனராக பணிபுரிய, விஜய் பிரசாந்த் பிரபுதேவா ஆகிய மூவரும் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்களாம். குடும்ப படமாக தான் இதனை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதேசமயம் படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் படமாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது.

- Advertisement -

சற்று முன்