சினிமா துறையில் நடிகர், நடிகைகளுக்கு பெயர், புகழ், வசதிகள் எப்படி கிடைக்கிறதோ அப்படித்தான் அவர்களை பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் தாராளமாக கிடைத்து விடுகின்றன. நடிக்க வந்த புதிதில் இந்த விமர்சனங்களால், வதந்திகளால் திக்குமுக்காடி போகும் சில நடிகை, நடிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சுதாரித்துக்கொள்கின்றனர். பிறகு எந்த விமர்சனமும், வதந்தியும் அவர்களை பாதிப்பது இல்லை.
குறிப்பாக தமிழ் சினிமாவில் அடிக்கடி இதுபோன்ற விமர்சனங்களில் சிக்கிக்கொள்பவர்கள் முன்னணி நடிகர், நடிகைகளாக தான் இருக்கின்றனர். குறிப்பாக, ரஜினிகாந்த், சமீபத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் பேசியது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல், கமல்ஹாசன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி விமர்சனம் செய்யப்படுகிறார். அடுத்தபடி அஜீத், விஜய் போன்றவர்களும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கின்றனர். நடிகைகளில் நயன்தாரா, திரிஷா, குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்களும் சர்ச்சை நாயகிகளாக இருந்து வருகின்றனர். மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மூலம், இசைப்புயல் ஏஆர் ரகுமானும் இந்த விமர்சனத்துக்கு தப்பவில்லை.
அதிலும் நடிகர் விஜய் அடிக்கடி கடுமையான விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார். வாரிசு, பீஸ்ட் போன்ற படங்களில், மிக மோசமாக திரைக்கதையில் நடித்தது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி லியோ போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்றும், டிரெய்லரில் அருவறுக்கும்படியான வார்த்தைகளை பேசியும் பலரது கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார் விஜய்.
விஜய் நடிக்க துவங்கிய காலத்தில், விஜய் நடிக்கும் படங்களின் கதைகளை முதலில் கேட்பவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்தான். அவர் ஓகே சொல்லும் படங்களில்தான் விஜய் நடிப்பார். அப்படி அவரது ஆரம்பகால சினிமா வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்து உதவியவர் அவர் தந்தை எஸ்ஏசி. ஆனால் விஜய் வளர்ந்த பிறகு, தன்னை வாழ்க்கையிலும், சினிமாவிலும் வளர்ந்த தந்தையை ஒதுக்கி வைத்துவிட்டார். இது அவர் செய்த மாபெரும் தவறு.
இன்று லியோ படத்தில் இப்படி ஒரு வசனம் பேசும் காட்சி இருப்பது தெரிந்திருந்தால், நிச்சயம் அதை எஸ்ஏசி தடுத்திருப்பார். மறுத்திருப்பார். இந்த சர்ச்சையே விஜய்க்கு வந்திருக்காது. இதுபோல் பல விஷயங்களில் எஸ்ஏசி தன் அனுபவத்தால் விஜய்க்கு நல்ல பெயரை மட்டுமே ஏற்படுத்தி தந்திருப்பார். இதையெல்லாம் விஜய் இனியாவது யோசிக்க வேண்டும் என, சினிமா வட்டாரத்தில் ஒரு லேட்டஸ்ட் டாக் உலா வருகிறது.





