- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் இதுவரை அந்த டைரக்டரின் படத்தில் நடிக்கவே இல்லையா, மேக்கப் டெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம்...

நடிகர் விஜய் இதுவரை அந்த டைரக்டரின் படத்தில் நடிக்கவே இல்லையா, மேக்கப் டெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் டைரக்டர் வேண்டாமுன்னு சொல்லிட்டாரா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இப்போது அவர்தான் டாப் ஸ்டாராக இருக்கிறார். ரஜினி, கமல், அஜீத் டாப் ஸ்டார் வரிசையில் இருந்தாலும், அவர்களில் அதிகபட்சமாக ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் மட்டும்தான். ரஜினி ரூ. 120 கோடி, கமல் ரூ. 150 கோடி, அஜீத் ரூ. 125 கோடி மட்டுமே இப்போதைக்கு சம்பளமாக பெறுகின்றனர்.

அதே போல் படம் வசூலில் முன்னணியில் இருப்பதும் விஜய் படங்கள்தான். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ என விஜய் நடித்த படங்கள் அனைத்துமே வசூலில் சக்கைப்போடு போடுகின்றன. லியோ படம் விமர்சன ரீதியாக மோசமாக பேசப்பட்டாலும் ஏறக்குறைய 600 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

- Advertisement -

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் மொக்கை என கூறப்பட்டாலும் படம் வசூல் ரீதியாக சக்சஸ்தான். அதனால்தான் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை எடுக்க நெல்சனை அனுமதித்தார். அதனால் விஜய் படங்களை பொருத்தவரை விமர்சன ரீதியாக அது தோல்வியாக இருந்தாலும், வசூலில் விஜய் தயாரிப்பாளர்களை எப்போதுமே ஏமாற்றியதில்லை.

ஆனால் பெரிய நடிகராக இருந்தாலும் சில முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கனவாகவும் இருக்கும். அந்த வகையில், நடிக்க வந்த புதிதில் இயக்குநர் பாரதிராஜா படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஜய். ஆனால் அவருக்காக படம் இயக்க விரும்பாததால் அந்த நேரத்தில் பாரதிராஜா மறுத்துவிட்டு, சமீபத்தில் அதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் டைரக்டர் வரிசையில் அடுத்து இருப்பவர் மணிரத்னம். இந்திய சினிமா உலகமே, மணிரத்னம் என்றால் தலை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு இயக்குநராக மதிக்கப்படுகிறார். இதுவரை 67 படங்களில் நடித்த விஜய், இதுவரை மணிரத்னம் இயக்கிய படத்தில் நடிக்கவில்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் நடிப்பதற்காக விஜய்க்கு ராஜா வேடமிட்டு, மேக்கப் டெஸ்ட், போட்டோ ஷூட் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கெட்டப்பில் விஜய், மணிரத்னத்துக்கு திருப்தி அளிக்காததால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியவில்லை. அதனால் அந்த வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தி நடித்தார். வரும்காலத்தில், கூடிய விரைவில் மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்