- Advertisement -
Homeபொழுதுபோக்குபாராட்சமின்றி போலீஸ் அனுமதி வழங்க தவெக தொடர்ந்து வழக்கு… அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம் - விஜய்தான்...

பாராட்சமின்றி போலீஸ் அனுமதி வழங்க தவெக தொடர்ந்து வழக்கு… அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம் – விஜய்தான் அதற்கு பொறுப்பு என்றும் எச்சரிக்கை!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழக அரசியல் களத்தில் மாநில மாநாடு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு என்று தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு பிரசார பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக போலீஸ் விதித்து வருகிறது. இந்த நிபந்தனைகளை கட்டுப்பாடுகளை மீறீனால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சிக்கு வந்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் 7 பேர் மீது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

- Advertisement -

இந்த சூழலில், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும் மற்ற அரசியல் கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளையும் தவெக கட்சிக்கு விதிப்பதாக தமிழக காவல் துறை மீது தவெக தரப்பில் புகார் எழுந்துள்ளது.
விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருச்சியில் நடந்த தவெக கூட்டத்தின் போது சேதப்படடுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா, இல்லை என்றால் அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

- Advertisement -

பிரசாரத்தின் போது கட்சியின் தலைவர் விஜய்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர்தான் அதற்கு பொறுப்பு. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் இதுபோன்ற கூட்டங்களுக்கு வராமல் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு தவெக ஒரு முன் உதாரணமாக இருக்கலாமே என்றும் கோர்ட் தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கில், உயரமான இடங்களில் ஏறி நிற்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், வருகிற 24ம் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தது. அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் வகுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கும் சில அறிவுரைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்