- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை பிரிந்த பிறகு சினிமாவிலும், அரசியலிலும் மளமள வென சரிவை சந்தித்த கேப்டன் - அவருடன்...

அவரை பிரிந்த பிறகு சினிமாவிலும், அரசியலிலும் மளமள வென சரிவை சந்தித்த கேப்டன் – அவருடன் இருந்தே வளர்ச்சியை முடக்கிய அந்த 2 பேர்

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக இருந்த அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். 2005ம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய விஜயகாந்த், அரசியலிலும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றார். தேமுதிக துவங்கிய பின் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்து நின்று, 8.11 சதவீதம் ஓட்டுகளை பெற்றார். அடுத்து 2011ம் ஆண்டு தேர்தலில், பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவை பின்னால் தள்ளியது.

- Advertisement -

இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற தேமுதிக எதிர்கட்சி தலைவர் பதவியை கைபற்றியது. ஆனால் சட்டசபை சபையில் நாக்கை துருத்திக்காட்டி, விஜயகாந்த் நடந்துக்கொண்ட விதம், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அரசியலில் பின்னடவை சந்திக்க துவங்கினார்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்துடன் பல ஆண்டுகள் இருந்தவர் அவரது நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர். மதுரையில் இருந்த பால்ய காலத்திலேயே இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த் சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர் ராவுத்தர்தான். அவர் நடிக்க வேண்டிய கதைகளை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் தருவது கேப்டனுக்கு ஏணியாக இருந்தவர், ராவுத்தர் திருமணம் கூட செய்துக்கொள்ளவில்லை.

- Advertisement -

ஆனால் பிரமேலதாவை திருமணம் செய்த பிறகு, இப்ராகிம் ராவுத்தர் நெருக்கத்தை பிரேமலதா, அவரது தம்பி எல்கே சுதீஷ் ஆகிய இருவரும் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய படங்களின் கதைகளை எல்கே சுதீஷ் கேட்க ஆரம்பித்தார். அரசியல் நடவடிக்கைகளில் பிரேமலதா நுழைந்து நாட்டாமை செய்ய ஆரம்பித்தார்.

இப்படி பிரேமலதா, எல்கே சுதீஷ் அத்துமீறலை அடுத்து இப்ராகிம் ராவுத்தர் ஒதுங்க ஆரம்பித்தார். விஜயகாந்துடன் சண்டை, வாக்குவாதம், எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், விஜயகாந்த் நிலை அறிந்து ஒரு புரிதலுடன் இப்ராகிம் ராவுத்தர் பிரிந்தார். அதை விஜயகாந்தும் புரிந்துக்கொண்டார். இப்ராகிம் பிரிவுக்கு பிறகு சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் இறங்கு முகத்தில் போனார். ஆக, நண்பரின் பிரிவும் மனைவி, மைத்துனரின் அத்துமீறலும் கேப்டன் வீழ்ச்சியடைய காரணமானது.

- Advertisement -

சற்று முன்