- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஜே சூர்யா இப்படி ஒரு படத்தில் நடிக்கிறாரா? படத்தோட பேரே ரொம்ப மிரட்டலா இருக்குதே, அழுத்தமான...

எஸ்ஜே சூர்யா இப்படி ஒரு படத்தில் நடிக்கிறாரா? படத்தோட பேரே ரொம்ப மிரட்டலா இருக்குதே, அழுத்தமான விஷயத்தை பேசப் போறாங்களா – அட டைரக்டர் இவரோட சிஷ்யரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வில்லன் நடிகருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கும். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு புதிய வில்லன் வந்து விடுவார். இப்படி பல வில்லன் நடிகர்களை பார்த்திருக்கிறது தமிழ் சினிமா. ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ், ராதாரவி என்ற வரிசையில், இப்போது எஸ்ஜே சூர்யா மிரட்டலாக நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஷால் நடித்த படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. பல படங்கள் பயங்கரமான பிளாப் படங்களாக இருந்தன. அந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு கம்பேக் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு 90 சதவீத காரணம் எஸ்ஜே சூர்யா தான் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

அதனால்தான், எஸ்ஜே சூர்யா அடுத்தடுத்த படங்களில் வில்லன் ரோல்களில் நடிக்க கமிட் ஆகி பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனும் அஜீத்குமார் நடிப்பில் குட்பேட் அக்லி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். ஆனால் அடுத்து ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற பிளாப் படத்தை தந்து மீண்டும் பிளாப் நாயகனாக நிற்கிறார் விஷால்.

ஆரம்பத்தில் குஷி மற்றும் வாலி படங்களை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் எஸ்ஜே சூர்யா. இந்த 2 படங்களுமே விஜய் மற்றும் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படங்களாக அமைந்தன. இப்போதும் எஸ்ஜே சூர்யா வில்லனாக ஜெயிக்க காரணம், ஒரு இயக்குனராக அவருக்குள் நிறைந்திருக்கும் நடிப்பாற்றலும், கிரியேடிவிடியும்தான்.

நடிகர் எஸ்ஜே சூர்யா வித்யாசமான நடிப்பில் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருப்பதால், அவருக்கான வித்யாசமான கதைகளும் உருவாகின்றன. அந்த வகையில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த லட்சுமி சரவணக்குமார் அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

இவர் எழுத்தாளர் என்பதும். இந்தியன் 2 படத்துக்கு கதை வசனம் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் பன்றி வேட்டை என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். படத்தின் பெயரிலேயே வித்யாசம் இருப்பதால், அழுத்தமான விஷயத்தை பேசும்படமாக இது இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்