இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். தொடர்ந்து எஜமான் சீவலப்பேரி பாண்டி எட்டுப்பட்டி ராசா கரிசக்காட்டு பூவே வனஜா கிரிஜா சுயம்வரம் தசாவதாரம் போக்கிரி என பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த படம் போக்கிரி. இந்த படத்தில் போலீஸ் கமிஷனராக நெப்போலியனும் நடித்திருந்தார். அப்போது ஷாட் இடைவெளியில் கேரவனில் இருந்த விஜயை சந்திக்க நெப்போலியன் சென்ற போது, என்னை எதுக்கு வந்து இப்போ டிஸ்டர்ப் பண்றீங்க என்று விஜய் நெப்போலியனை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். அந்த சம்பவத்துக்கு பின்பு விஜயுடன் நெப்போலியன் நடிக்கவில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, நீங்க ஏன் விஜயுடன் இணைந்து போகலே என்று கேட்டால் எனக்கு ஒண்ணும் இல்லே. அந்த மாதிரி ஒரு சம்பவம் போக்கிரி படத்துல நடந்துச்சு. அந்த சம்பவத்துக்கு அப்புறம் நானும் விஜயும் பேசிக்கிறது இல்லே. அவரது படங்கள் எதுவும் பார்க்கறது இல்லே. அவருடன் நடிக்கிறதும் இல்லே.
விஜய் ரெடி என்றால் நான் பேச ரெடி என்று அப்பவே சொன்னேன். இப்பவும் சொல்றேன். நான் ரெடி அவர் ரெடியா? நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும். அவருடன் இணைந்து போக நான் ரெடி. என்னுடன் இணைந்து போக விஜய் ரெடியான்னு நீங்க விஜய்கிட்ட தான் கேட்கணும்.
ஏன்னா அவர் பெத்த தாய் தகப்பன் கிட்டயே பேசாம இருக்கிறாரே? இன்னிக்கு ஊர் உலகத்துல எல்லாருமே தாய் தகப்பன் கிட்டயே விஜய் பேசாமல் இருக்கிறார்ன்னு பேசிக்கிறாங்க. எனக்கு இங்கே அமெரிக்கா வரைக்கும் செய்தி வந்திருக்குது. அது உண்மையா பொய்யான்னு கூட எனக்குத் தெரியாது.
அதனால் முதலில் அவர் தாய் தகப்பன் கூட சமரசம் ஆகட்டும். எனக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மோதல் என்பது 15 வருஷம் ஆச்சு. இவ்வளவு நாள் இடைவெளிக்கு அப்புறம் விஜய் என்கிட்ட பேச தயாரா இருப்பாரான்னு தெரியலே. ஆனா நான் ரெடியா அவர் ரெடியா இதை அவர்கிட்ட கேளுங்க என்று நடிகர் நெப்போலியன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





