- Advertisement -
Homeபொழுதுபோக்குசச்சின் ரி ரிலீஸ் ஆவதற்கு முன்பே முந்திய மற்றொரு விஜய் படம், இதுல வடிவேலு டபுள்...

சச்சின் ரி ரிலீஸ் ஆவதற்கு முன்பே முந்திய மற்றொரு விஜய் படம், இதுல வடிவேலு டபுள் ரோல் செஞ்சிருப்பாரே? – தளபதியை வரவேற்க தயாரான ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது 69வது படமாகும். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படம்தான் விஜய் நடிக்கிற கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரூ. 22 கோடி வரை தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தது. அதே போல் விஜய் நடித்த சச்சின் படமும் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த வாரத்தில் ஜெயம் ரவி அசின் பிரகாஷ் ராஜ் நதியா நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ரி ரிலீஸானது. அதே நாளில் சிவகார்த்திகேன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகனம் படமும் ரி ரிலீஸ் ஆனது. இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

ஆளவந்தான் முத்து தளபதி விண்ணை தாண்டி வருவாயா போக்கிரி 3 வாரணம் ஆயிரம் போன்ற பல படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ஆர்யா சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த படங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான சச்சின் படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த படமாகும். காதலுக்கு மரியாதை படத்துக்கு பிறகு அதுபோன்ற ஒரு சாயலில் ஜாலியான ஒரு படமாகவும் இந்த படம் இருந்தது. முழுக்க முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்ட இந்த படம் மீண்டும் ரி ரிலீஸ் செய்ய இருந்த நிலையில், சில இடையூறுகளால் இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் அதே நேரத்தில் நாளை நடிகர் விஜய் நடித்த பகவதி படம் ரி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் ரீமா சென் ஜெய் மோனிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் விஜய் டீக்கடை நடத்துவார். ஒரு கட்டத்தில் பெரிய டான் ஆக மாறிவிடுவார். குட்டி பகவதி, மதுரை வடிவேலு என 2 ரோல்களில் வடிவேலு நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக விஜய் நடித்த இந்த படத்தை தளபதி ரசிகர்கள் வரவேற்க ஆவலாக உள்ளனர்.

சற்று முன்