- Advertisement -
Homeபொழுதுபோக்குபுருஷன் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட சுந்தர் சி - 5 நிமிட குறும்படம் போல...

புருஷன் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட சுந்தர் சி – 5 நிமிட குறும்படம் போல டீசரிலேயே அசத்திட்டாங்களே… – மீண்டும் நடிகர் விஷாலுக்கு ஒரு சக்சஸ் உறுதி!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக பெரிய வெற்றி எதுவும் இல்லாத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை தந்த படமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு வெளியான இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் தோல்வியடைந்தது.

இந்த சூழலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகத ராஜா படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 12 ஆண்டுகள் கழித்து வந்த இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். இந்த ஆண்டு ஜீவா நடித்த டிடிடி படம் போல போன ஆண்டு மதகத ராஜா படம்தான் பேசக்கூடிய படமாக இருந்தது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஷால் நடித்த மகுடம் படத்தை தொடர்ந்து இப்போது சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஆப் ஆதி தான் இசையமைக்கிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் இந்த படத்துக்கு புருஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பென்ஸ் மீடியா நிறுவனம் ஏசி அருண்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பிரமோ 5.41 நிமிடங்கள் என குறும்படம் போல இப்போது வெளியாகி உள்ளது. இதில் விஷால் தமன்னா மற்றும் யோகிபாபு நடித்த காட்சிகள் உள்ளன.

- Advertisement -

தமன்னாவின் கணவர் விஷால், வீட்டில் மனைவிக்கு அடிமையாக வீட்டு வேலைகளை செய்கிறார். டிவி சீரியல் ஹீரோ யோகிபாபு அங்கு வர யோகிபாபுவுக்கு டீ போட்டு வருமாறு தமன்னா சொல்கிறார். கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிச்சனில் புகுந்து விடும் ரவுடிகளை விஷால் பந்தாடுகிறார். அதை பார்க்கும் யோகிபாபு மிரண்டு போகிறார்.

மனைவிக்கு அடங்கிய கணவராக பயந்து நடந்துக்கொள்ளும் விஷால் கிச்சனில் வில்லன்களை கொடூரமாக தாக்குவதை பார்த்து அரண்டு போன யோகிபாபு புருஷனாக இருக்கிற முக்கியமல்ல, புருஷன் புருஷனாக இருக்கணும் என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு விஷாலின் ஆவேசத்தை பார்த்துவிட்டு புருஷன் புருஷனா இருக்கிறதை விட புருஷன் பொறுமையாக இருக்கணும் என்கிறார். இந்த வீடியோ இறுதியில் சுந்தர் சி விஷால் ஹிப் ஆப் ஆதி பேசிக்கொள்ளும் ஒரு உரையாடலும் இடம்பெற்றுள்ளது. இந்த டைட்டில் டீசரே ஒரு 5 நிமிட குறும்படம் போல ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

- Advertisement -

சற்று முன்