இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வரும் 5ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை தி கோட் படத்தில் இருந்து 3 சிங்கிள்கள் வெளிவந்துள்ளன.
விசில்போடு, சின்ன சின்ன கண்கள், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என்ற அந்த 3 பாடல்களுமே மொக்கையான பாடல்களாக இருந்து ரசிகர்களுக்கு பலத்த அதிருப்தியை தந்திருக்கிறன. ஆனால் கடந்த 17ம் தேதி மாலை வெளியான தி கோட் டிரெய்லர் மட்டும் 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
இதைத்தொடர்ந்து கடைசி சிங்கிளாக நாளை, விஜய் மற்றும் திரிஷா குத்தாட்டம் போட்ட அயிட்டம் பாடலை வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். நாளை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த பாட்டை படக்குழு அப்டேட் செய்கிறது.
இயக்குனர் வெங்கட்பிரபுவின் நீண்டகால நண்பர் வைபவ். வெங்கட்பிரபு இயக்கிய பல படங்களில் வைபவ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதே போல் தி கோட் படத்திலும் விஜயுடன் வைபவ் நடித்துள்ளார். டிரெய்லரில் அவர் வரும் காட்சிகளை பார்த்தால் நிச்சயம் வில்லன்களில் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் வெங்கட்பிரபுவுடன் கலந்துக்கொண்ட நடிகர் வைபவ், தி கோட் படம் குறித்த தனது அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அப்போது விஜய் பற்றிய விஷயங்களையும் வெளிப்படையாக பேசினார். அப்போது வைபவ் கூறுகையில், தி கோட் படம் பார்த்த விஜய், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று என்னிடம் கூறினார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது என்னை அருகில் அழைத்து, நீங்கள் அனைவரும் வெங்கட்பிரபுவுடன் எத்தனை ஆண்டுகளாக பழக்கம் என்று கேட்டார். சின்ன வயதில் இருந்தே நாங்கள் எல்லாம் பிரண்ட்ஸ் என்றேன். தி கோட் படத்தை வெங்கட்பிரபு சிறப்பாக இயக்குகிறார். ஆனால் எந்த டென்சனும் ஆகாமல் கூல் ஆக இருக்கிறார் என்றும் விஜய் கமெண்ட் செய்தார். அதுதான் வெங்கட்பிரபுவின் யுக்தி என்று சொன்னேன் என அந்த பேட்டியில் வைபவ் பேசியிருக்கிறார்.





