தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு துவங்கிய நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். அதிமுக திமுக அல்லாத புதிய மாற்று அரசியலை எதிர்பார்க்கும் மக்களுக்கு விஜய் வருகை பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது.
இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார். அதே நேரத்தில் பாயாசம் என்று திமுகவை அரசியல் எதிரி என்றும் பாசிசம் என்று மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் விஜய் பகிரங்கமாகவே பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நடிகர் விஜய் இதுவரை அதிமுக குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அதிமுகவினர் குறித்த எந்த மாற்றுக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். மேலும் தவெக கட்சியுடன் இணைய விரும்பும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் பதவி வழங்கப்படும் என்றும் ஏற்கனவே விஜய் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 65க்கும் மேற்பட்ட தொகுதிகளை தவெக கட்சிக்கு ஒதுக்கித் தரவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி தரவும் அதிமுக தலைமை ஒத்துக் கொண்டதாக ஒரு தகவல் பரவியது. இதற்கு சம்மதிக்காக தவெக, முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை விஜய்க்கு விட்டுத் தர வேண்டும். தேர்தலில் 110 தொகுதிகள் தவெக கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.
ஆனால் இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தவெக தனித்துதான் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜன் சுராத் கட்சியின் தலைவர் தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற நிலையில் அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்க்கு அவரது தவெக கட்சி ஜெயிப்பதற்கான என்னால் ஆன உதவிகளை நான் செய்வேன். அதே போல் பீகார் தேர்தலின் போது அவருக்கும் எனக்கு உதவுவதாக உறுதி அளித்திருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் தனித்தே போட்டியிடுவோர். 118 தொகுதிகளில் நிச்சயமாக தவெக வெற்றி பெறும். நிச்சயமாக அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் தவெக கூட்டணி வைக்காது என்று உறுதியாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.





