நடிகர் விஜய் இன்று மிக பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது படம் லியோ, 600 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை புரிந்திருக்கிறது. இப்போது, விஜய் 68 படத்தில், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துவரும் விஜயின் சம்பளம் ரூ. 125 கோடியில் இருந்து, ரூ. 200 கோடியாக உயர்ந்துள்ளது.
நடிகர் விஜயின் முழு பெயர் ஜோசப் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். இவர் மிக பிரபலமான இயக்குநர். 1980,90களில் ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தந்தவர். அந்த காலகட்டத்திலேயே புரட்சிக்கரமான கருத்துகளை சினிமாவில் சொன்ன தைரியசாலி இயக்குநர்.
இன்றைய சூழ்நிலையில், விஜய் மீது அதிக அக்கறை, அன்பு கொண்ட காரணத்தால் பல விஷயங்களில் எஸ்ஏ சந்திரசேகருக்கும், மகன் விஜய்க்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில், மாதக்கணக்கில் ஏன் ஆண்டுகணக்கில் விஜய் அவருடன் பேசாமல் இருக்கிறார்.
ஆனால் இவர்களை விட மிக முக்கியமான விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரை, பல ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கி வைத்தவர்கள்தான் விஜயும், எஸ்ஏ சந்திரசேகரும். அவர் யாருமல்ல. நடிகர் விஜயின் சொந்த தாய்மாமா எஸ் என் சுரேந்தர்தான்.
விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரின் உடன் பிறந்த சகோதரர் எஸ்என் சுரேந்தர் பிரபல பாடகர். கடந்த 1980,90களில் பல படங்களில் இவர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். உதாரணமாக ஊமைவிழிகள் படத்தில் இடம்பெற்ற மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா பாடல், என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் பாரிஜாத பூவே, அந்த தேவலோக தேனே போன்ற பல பாடல்களை சொல்லலாம்.
விஜய் சிறுவயதாக இருந்த போது தன் சகோதரி ஷோபா குடும்பத்துக்காக பல உதவிகளை செய்தவர் எஸ்என் சுரேந்தர். விஜயை பள்ளியில் சேர்த்துவிடுவது, நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, குடும்ப செலவுகளுக்கு பணம் தருவது என பல விஷயங்களில் உதவிய எஸ்என் சுரேந்தரை ஒரு கட்டத்துக்கு பிறகு, நேரில் பார்ப்பது பேசுவது என்ற உறவு கூட இல்லாமல் தவிர்த்துவிட்டது விஜய் குடும்பம். காரணம் எஸ்ஏசிக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது. சென்னை 28 படத்தில், பீச்சில் கிரிக்கெட் விளையாடி ஜெயிக்கும் சிறுவனாக நடித்திருப்பது எஸ்என் சுரேந்தரின் மகன்தான். பல படங்களில் அவரும் நடித்து வருகிறார்.





