- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மகனுக்கு மட்டும் இந்த முக்கியத்துவம் ஏன்? மற்ற புதுமுக இயக்குனர்களுக்கு இந்த ஆதரவு இல்லையே?...

விஜய் மகனுக்கு மட்டும் இந்த முக்கியத்துவம் ஏன்? மற்ற புதுமுக இயக்குனர்களுக்கு இந்த ஆதரவு இல்லையே? – சூர்யா ஜோதிகாவை விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் களத்துக்கு வருகின்றனர். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்து தங்களது முதல் படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். பெரும்பாலும் அவர்களது முதல் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற் வெற்றி பெற்று விடுகிறது.

உதாரணமாக சிறை பட இயக்குனர் ராஜகுமாரி சுரேஷ்குமார் மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் காக்காமுட்டை பட இயக்குனர் மணிகண்டன் குடும்பஸ்தன் பட இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் என பல புதுமுக இயக்குனர்கள் ஜெயித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் இப்படி பல புதுமுக இயக்குனர்கள் படங்கள் வெளியாகி பெரிய வெற்றியை பெறும் போது உடனே மற்ற ஹீரோக்கள் அவர்களை அழைத்து பாராட்டி தங்களது அடுத்த படத்துக்கு கதை ரெடி பண்ண சொல்லி விடுவார்கள். பிறகு ஆண்டுக்கணக்கில் அவர்களை காத்திருக்க வைத்து அடுத்த படம் வரும்போது அவர்களது இமேஜே டேமேஜ் ஆகி விடுகிறது.

சினிமா பின்புலம் இல்லாத புதுமுக இயக்குனர்கள் நடிகர்கள் திரைக்களத்துக்கு வரும் போது தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக உள்ள யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அதுவே ஒரு பிரபல நடிகர் பிரபல நடிகை பிரபல இயக்குனர் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் சினிமா துறைக்கு வந்தால் பாராட்டி வரவேற்பு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

முன்னாள் நடிகர் இந்நாள் முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு நடிகர்கள் சூர்யா கார்த்தி நடிகை ஜோதிகா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, ஜேசன் சஞ்சய் வருகை தமிழ் சினிமாவுக்கு நல்வரவு ஆக இருக்கட்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறுகையில், சூர்யா கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து ஜேசன் சஞ்சய் இயக்கிய படத்திற்கு ஆதரவளிப்பது விஜய் மகன் என்பதால் மட்டுமே. தமிழ் சினிமாவை ஊக்குவிக்கும் எண்ணம் இருந்தால் மற்ற வளர்ந்து வரும் புதிய இயக்குனர்களுக்கும் இதே போன்ற ஆதரவை வழங்கலாமே என்று அவர் அந்த வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ளார். இது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்