- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்துவரும் தளபதி 69 படத்தின் கதை அதுவே தான், உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்,...

விஜய் நடித்துவரும் தளபதி 69 படத்தின் கதை அதுவே தான், உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம், விரக்தியில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தி கோட் படத்தை தொடர்ந்து இப்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து நடந்து வருகிறது. அரசியல் மாநாடுக்காக சில வாரங்கள் பிரேக் எடுத்த விஜய், இப்போது தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டுள்ளார்.

இயக்குனர் எச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தின் கதை, ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுக்காக உருவாக்கப்பட்டது. அதில் சில மாற்றங்களுடன் விஜய் படமாக தயாராகி வருகிறது என்று முதலில் ஒரு தகவல் பரவியது. பிறகு இது கமலுக்காக சொல்லப்பட்ட கதை அல்ல, வேறு கதைக்களத்தில் உருவான ஒரு கதை என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

இதற்கிடையே இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் நடிக்கிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் அவர் போலீஸ் அதிகாரியாக சார்ஜ் எடுத்துக்கொண்டு, வில்லன்களை வேட்டையாடுவதே படத்தின் மையக்கரு என்றும் ஒரு தகவல் பரவியது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் என்றும் தகவல் வெளியானது. பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா நடித்த கேரக்டரில்தான் இந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த படம் தெலுங்கில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மாஸ் ஹிட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, தளபதி 69 படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம், தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. விஜய் படம் வெளியாகும் போது, பகவந்த் கேசரி படம் போலவே இருப்பதாக சர்ச்சை எழுந்தால் அதை தவிர்ப்பதற்காகவே இப்படி ரீமேக் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல்பாடு, தளபதி 69 படம் அந்த பகவந்த் கேசரி படத்தை போலவே இருக்கும் என்பதை மறைமுகமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி விட்டது. அதாவது நேரடியாக அந்த படத்தை ரீமேக் செய்யாமல், அதில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்து, தமிழில் விஜய்க்கு ஏற்ப கதையில், காட்சிகளில் மாற்றம் செய்து எச் வினோத் திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்