- Advertisement -
Homeபொழுதுபோக்குஈசல் கூட்டம் மாதிரி உன்னை தேடிட்டே வருவாங்க.. வெளியானது வெறித்தனமான லியோ ட்ரெய்லர்

ஈசல் கூட்டம் மாதிரி உன்னை தேடிட்டே வருவாங்க.. வெளியானது வெறித்தனமான லியோ ட்ரெய்லர்

- Advertisement -

தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவர் இதுவரை இயக்கிய மாநகர, கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர். இவற்றில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட். இந்த சூழலில் அடுத்ததாக அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் சர்ட்டிஃபிகேட்டும் கிடைத்துவிட்டது. யு/ஏ சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பல இடங்களில் கெட்டவார்த்தைகள் வருவதால் அதற்கு சென்சார் போர்டு மியூட் போட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் இன்று காலையிலிருந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

படத்திலிருந்து கடந்த சில வாரங்களாகவே அப்டேட்டுகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. அதன்படி வந்த போஸ்டர்கள், பாடல் என அனைத்துமே பக்கா ரெஸ்பான்ஸை பெற்றது. இன்று படத்திலிருந்து த்ரிஷாவின் போஸ்டரும் வெளியானது. அந்தப் போஸ்டரில் ரத்தம் தெறிக்கும் வாளை பார்த்து த்ரிஷா ஷாக்காவது போல் இருந்தது. இதனால் பல யூகங்களுக்கு ரசிகர்கள் சென்றிருக்கின்றனர்.

சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எத்தனை மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக காலையிலிருந்தே லியோ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். ரோகிணி தியேட்டருக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

- Advertisement -

ஒருவழியாக ட்ரெய்லரானது மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சொன்னபடி சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியானது. ட்ரெய்லரின் ஆரம்பத்தில் சீரியல் கில்லர் குறித்து கதை சொல்லும் விஜய் பிறகு சஞ்சய் தத் கேங்கால் துரத்தப்படும் ஆளாக மாறுகிறார். மேலும் த்ரிஷாவின் கணவராக இந்தப் படத்தில் அவர் நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. கௌதம் மேனன் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இருக்கும் என்று தெரிகிறது. வெறித்தனமான இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் இப்போது கொண்டாடிவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்