- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68ல் ரூ. 200 கோடியாக அதிகரித்த விஜய் சம்பளம், இழப்பை ஈடுகட்ட படக்குழுவினர் தலையில்...

விஜய் 68ல் ரூ. 200 கோடியாக அதிகரித்த விஜய் சம்பளம், இழப்பை ஈடுகட்ட படக்குழுவினர் தலையில் மிளகாய் அரைத்த தயாரிப்பு நிறுவனம்

- Advertisement -

லியோ படத்தை அடுத்து, நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் அடுத்த படம் விஜய் 68. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். கடந்த 2ம் தேதி படத்தின் துவக்க விழா பூஜை நடத்தப்பட்டு, சென்னையில் பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரபுதேவா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். நட்சத்திர கூட்டமே நடிப்பதால் இது குடும்ப படமா, ஆக்‌ஷன் படமா என்பதில் விஜய் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். இதில் வெங்கட்பிரபு தனது நீண்ட கால நண்பர்களுக்கு வாய்ப்பளிக்காதது, படத்தின் பூஜைக்கு கூட அழைக்காதது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ. 200 கோடி தரப்பட்டுள்ளது. அவர் லியோ படத்துக்கு ரூ. 125 கோடி மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், இந்த படத்தில் ரூ. 75 கோடி அதிகரித்து, தரப்பட்டுள்ளது. அப்பா மகன் இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிப்பதால், இரண்டு ரோல் என சம்பளம் அதிகரித்து தரப்பட்டதா என, சினிமா ரசிகர்கள் பலரும் இப்போதே கலாய்த்து வருகின்றனர்.

இதில், மற்றொரு கவலை தரும் விஷயம் என்னவென்றால், விஜய் சம்பளம் உயர்த்தப்பட்டதை காரணமாக காட்டி, விஜய் 68 படத்தில் பணிபுரியும் டெக்னிஷியன்கள், துணை நடிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிவோரின் சம்பளம் ஏறக்குறைய பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை, பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக படத்தின் கேமராமேன் சித்தார்த் உன்னி, இதுவரை பணிபுரிந்த படங்களில், ரூ. ஒரு கோடி சம்பளமாக பெற்று வருகிறார். அவரது சம்பளத்தில் ரூ.40 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ. 60 லட்சம் மட்டுமே சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது. அதே போல், விஜய் படத்தில் பணிபுரிவதையே ஒரு பெரிய கவுரவமாக சொல்லி, பலரது சம்பளம் இப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

விஜய் 68 படத்தில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை குறைத்தது மட்டுமின்றி, படத்தின் தயாரிப்பு செலவுகளையும் பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம். படப்பிடிப்பு தளங்களில் டிபன், சாப்பாடு தரப்படுமா, அல்லது டீ பிஸ்கட் தந்து உபசரிப்பார்களா என்பது கூட சந்தேகம்தான் என்ற நிலையில், படக்குழுவினர் மன உளைச்சலில் உள்ளனர். நடிகர் விஜய் நடிக்கும் படத்தை உருவாக்க, அந்த படம் வெற்றி படமாக அமைய பாடுபடும் படக்குழுவினர் தலையில் மிளகாய் அரைக்கும் இந்த செயல், பலரையும் வேதனைப்பட வைத்திருக்கிறது.

சற்று முன்