- Advertisement -
Homeபொழுதுபோக்குஇறுமாப்புடன் 200 வெல்வோம் என எகத்தாள முழக்கமிடுபவர்களின் கூட்டணி கணக்குகள் எல்லாம் மைனஸ் ஆகி விடும்...

இறுமாப்புடன் 200 வெல்வோம் என எகத்தாள முழக்கமிடுபவர்களின் கூட்டணி கணக்குகள் எல்லாம் மைனஸ் ஆகி விடும் – அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

அம்பேத்கர் நினைவு நாளான நேற்று, சென்னையில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீடு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அந்நூலை வெளியிடஅம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே நூலை பெற்றுக்கொண்டார். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் விஜய் பேசியதாவது,மணிப்பூரில் இன்றைக்கு என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும் அதை கண்டுகொள்ளாமல் ஓர் அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது என்றால் சமூகநீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார்.

- Advertisement -

பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மனித உயிர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முழுமையாக அளிக்கும் மக்களை நேசிக்கும் ஒரு நல்ல அரசுதான் இதற்கு தீர்வாகும். நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும் சம்பிரதாயமாக அறிக்கை விடுவதும் மக்களுடன் இருப்பதாக காட்டிக் கொள்வதும் சம்பிரதாயமாக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

மக்களுடன் உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் என்ன பிரச்னை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காக, அவர்களுடன் உணர்வு பூர்வமாகவும் நான் எப்போதும் இருப்பேன். மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மக்களுக்கான அடிப்படை சமூகநீதி பாதுகாப்பு உறுதி செய்ய இயலாத ஆட்சியாளர்கள் உள்ளனர்.

- Advertisement -

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களுடன் இணைந்து நான் எடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று இங்கு வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் பிரஷர் தந்து, அவருக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் அவரது மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இங்கு இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்