சினிமா என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. பலரது கூட்டுமுயற்சியால் உழைப்பால் திறமையால் ஒரு இயக்குனரின் கனவை திரையில் கொண்டு வரும் ஒரு அற்புதக் கலையாகும். ஒரு படம் உருவாக தயாரிப்பாளர் முதல் யூனிட் பாய் வரை அனைவரது பங்களிப்பும் அவசியமாகிறது. இயக்குனர் இசையமைப்பாளர் ஹீரோ ஹீரோயின் என பலரும் சேர்ந்துதான் ஒரு படம் உருவாகிறது.
திரைப்படங்களை பொருத்த வரை டைரக்டர்தான் கதாநாயகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்வதுதான் சட்டமாக இருக்க வேண்டும். படம் வெளியான பிறகுதான் நடிகர் திரையில் ஹீரோவாக தெரிகிறார். படப்பிடிப்பு தளத்தை பொருத்த வரை ஹீரோவாக இருப்பவர் டைரக்டர்தான். ஆனால் பல ஹீரோக்கள், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனராக மாறி விடுகின்றனர்.
இதுவே பல பிரச்னைகளுக்கு காரணமாகி விடுகிறது. ஒரு இயக்குனரே நடிகராக மாறிவிட்டால், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு நடிக்க வேண்டும். அப்படிதான் கே பாக்யராஜ் சுந்தர் சி கேஎஸ் ரவிக்குமார் பார்த்திபன் பாண்டியராஜன் ஆர் சுந்தர்ராஜன் டி ராஜேந்தர் போன்றவர்கள் நடிக்கின்றனர்.
ஆனால் சில ஷூட்டிங்குகளில் ஹீரோக்கள், இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு துவங்கிய படம் டாக்ஸிக். இந்த படத்தை மலையாள நடிகை கீது மோகன்தாஸ் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே இவர் சில படங்களை இயக்கிய வரவேற்பை பெற்றவர். அவர் இயக்கிய அந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
கீது மோகன்தாஸ் டைரக்ட் செய்யும் டாக்ஸிக் படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆண்டில் மார்ச் மாதமே ரிலீஸாக வேண்டிய இந்த படம் வருகிற 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகிறது. இதனால் ஓராண்டு வரை இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர் கீது மோகன்தாஸூக்கும் படத்தின் ஹீரோ யஷ்க்கும் இடையே நீடிக்கும் பிரச்னைகள்தான். இதனால் பல நாட்கள் ஷூட்டிங் தாமதமாக நடக்கிறது. சில நாட்களில் இயக்குனர் கீது மோகன்தாஸ் இல்லாமல், யஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் ஈகோ மோதல் தொடர்ந்து நீடித்தால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூட டாக்ஸிக் படம் திரைக்கு வருமா என்பது சந்தேகம்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.





