- Advertisement -
Homeபொழுதுபோக்குபக்கா கமர்சியல் பட இயக்குனருடன் நான்காவது முறையாக சாயும் சியான் விக்ரம்... இந்த முறை என்ன...

பக்கா கமர்சியல் பட இயக்குனருடன் நான்காவது முறையாக சாயும் சியான் விக்ரம்… இந்த முறை என்ன கதையை கொண்டு வரப் போறாங்களோ?…

- Advertisement -

நடிகர் விக்ரம் தற்போது மலைபோல் நம்பிக் கொண்டிருப்பது தங்கலான் திரைப்படத்தை தான். கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் திண்டாடி வரும் அவர், தங்கலான் படம் ரிலீஸிற்காக காத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு, இந்த சாதிய கொடுமையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் விக்ரம் கெட் அப், பலரும் வியக்கும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட தாடி ஏறிய நெற்றி கையில் வேல்கம்புடன் அவர் நடந்து வரும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

ஸ்டுடியோ கிரீம் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் தங்கலான் திரைப்படம், முதலில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, மார்ச் மாதம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க விக்ரமின், துருவ நட்சத்திரம் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்வதற்காக கௌதம் மேனன் போராடி வருகிறார். பொருளாதார சிக்கல்களால் அந்த திரைப்படம் முடங்கி இருக்க, அதற்கு விக்ரம் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் படத்தின் திரையரங்குகளில் இறக்குவதற்காக தொடர்ந்து கௌதம் மேனன் முயற்சி செய்து வருகிறார். அநேகமாக இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதனிடையே சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் அருண்குமாருடன் இணைந்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்குமார், சேதுபதி, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்குவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இதனிடையே அருண்குமார் படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ஹரியுடன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இருவர் கூட்டணியில் சாமி, அருள், சாமி ஸ்கொயர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதில் சாமி திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்து விக்ரமிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இப்படியான சூழலில் தற்போது இவர்கள் மீண்டும் இணையப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஹரி விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்