- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இவரும் முரட்டு சிங்கிள் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டாரா…? ஆச்சரியப்படும் ரசிகர்கள் - கட்டாகுஸ்தி பட...

அட இவரும் முரட்டு சிங்கிள் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டாரா…? ஆச்சரியப்படும் ரசிகர்கள் – கட்டாகுஸ்தி பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

சினிமா துறையில் உள்ள சில நடிகர்கள், நடிகைகள் ஒரு கட்டத்துக்கு பிறகு திருமணம் என்பதே தங்களது வாழ்வில் வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர். அதற்கு பலர் சொல்லும் முக்கிய காரணம், தங்களது தனிமனித சுதந்திரம் பறிபோய்விடுகிறது என்பதுதான். படங்களில் நடித்து லட்சம் லட்சமாய் கோடி கோடியாக சம்பாதிக்கும் போது, கணவருக்கோ அல்லது மனைவிக்கோ கட்டுப்பட்டு இருக்க வேண்டுமா என்பதே அவர்களது கேள்வி.

அதனால் நடிகர்களில் விஷால், சிலம்பரசன், நட்டி என்கிற நடராஜன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட சிலர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதே போல் நடிகைகளில் திரிஷா, கிரண் ரத்தோர், ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன், பூனம் போஜ்வால், தபு, கோவை சரளா உள்ளிட்ட சிலர் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி முரட்டு சிங்கிளாக நடிகைகள் வாழ ஆசைப்பட முக்கிய காரணம், திருமணமாகி விட்டால் பெரும்பாலும் அவர்களை சினிமாவில் நடிக்க அவர்களது குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை. இது சினிமாத்துறை சார்ந்தவர்களாகவே இருந்தாலும், பெரும்பாலும் அதற்கு நோ தான் சொல்கின்றனர். அதனால் முரட்டு சிங்கிள் லிஸ்ட்டில் இளம் நடிகையான ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்து விட்டார்.

நடிகர் விஷால் நடித்த ஆக்சன், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த கட்டாகுஸ்தி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி படகோட்டும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

தற்போது மலையாளத்தில் ஹலோ மம்மி என்ற படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நேர்காணல் ஒன்றில் கூறியதாவது; என்னுடைய அம்மா விருப்பத்திற்காக இணையதளம் ஒன்றில் எனது சுய விபரங்களை பதிவிட்டேன். சிறுவயதில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் பல்வேறு சூழ்நிலைகளை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது.

பலரது திருமண வாழ்க்கையை பார்க்கும் போது எனக்கு திருமணம் செய்யும் ஆசையே வெறுத்து விட்டது. மகிழ்ச்சியே இல்லாத பலரது திருமண வாழ்க்கையை பார்த்துதான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இதற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே சிறிது கூட இல்லை. அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இளம் நடிகையான அவர் இப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்