- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரமின் வீர தீர சூரன் படத்திலிருந்து வெளியான முக்கிய தகவல்... லோகேஷ் கனகராஜின் முக்கியமான பிளாட்டை...

விக்ரமின் வீர தீர சூரன் படத்திலிருந்து வெளியான முக்கிய தகவல்… லோகேஷ் கனகராஜின் முக்கியமான பிளாட்டை கையில் எடுத்த சித்தா இயக்குனர்… அப்படின்னா பரபரப்புக்கு பஞ்சமே இருக்காதே…

- Advertisement -

கடந்த காலங்களில் தொடர்ந்து தோல்வி திரைப்படங்களாகவே கொடுத்து வந்த விக்ரம், தற்போது சுதாரித்து விட்டார். கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் அவர், பா ரஞ்சித் இயக்கத்தின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த வருடத்தில் வெளியாக இருக்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக தங்கலான் பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணம் அதன் மேக்கிங் தான். படத்திலிருந்து வெளியான இரண்டு க்ளிம்ப்ஸ் காட்சிகளே, அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம். குறிப்பாக விக்ரமின் கெட்அப் பலரும் வியக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அடர்ந்த தாடி, மேலாடை இல்லாத வேட்டி கட்டு, கையில் தடி என டெராறாக காட்சி அளிக்கிறார் விக்ரம்.

 

- Advertisement -

படத்தில் விக்ரமை தவிர்த்து பசுபதி, பூ பட பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட அடக்குமுறை மற்றும் சாதிய ரீதியிலான பாகுபாடு என இரண்டையும் பேசுகிறது இந்த திரைப்படம். கோலார் தங்க வயலில் நிகழ்ந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார்.

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ட்ரெய்லரும் வரும் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக, வீர தீர சூரன் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய அருண்குமார் தான் இதை எடுத்து வருகிறார். நேரடியாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே கூறப்பட்டது. படத்தில் விக்ரம் ஒரு மளிகை கடைக்காரராகவும், அதேசமயம் கேங்ஸ்டர் பின்னணியில் உள்ளவராகவும் நடிக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ, பலரையும் கவர்ந்தது.

 

இந்த நிலையில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் ஒரு நாள் இரவில் நடப்பது போல் படம் ஆக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைதி திரைப்படம் ஒரு நாள் இரவில் நடைபெறுவது போன்று தான் காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். இப்போது இதே பாணியை அருண்குமாரும் பின்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 50 சதவீத படப்பிடிப்பு பணிகளை முடித்திருக்கிறார்களாம். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்