- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 பிரமோ நிகழ்ச்சிக்காக 2 மாதங்களை ஒதுக்கிய ஹீரோ அல்லு அர்ஜூன், இதுக்காக பட்ஜெட்டில்...

புஷ்பா 2 பிரமோ நிகழ்ச்சிக்காக 2 மாதங்களை ஒதுக்கிய ஹீரோ அல்லு அர்ஜூன், இதுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்ளோ தெரியுமா? – அம்மாடியோவ், இது உருட்டா, உண்மையா?

- Advertisement -

சினிமாவில் பிரபல நட்சத்திரங்கள், ஹீரோயிசம் காட்டும் படங்கள்தான் பெரிய அளவில் வெற்றி படங்களாக அமைகின்றன. பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. ஆனால் கமர்சியல் என்ற பெயரில் சில சீனியர் நடிகர்கள், வயதுக்கு மீறிய வேகத்தில் ஆக்ரோஷமாக நடிப்பதும், ரயிலை விரலால் சுண்டுவிரலால் பின்னால் தள்ளுவதும், லாரிகளை ஒற்றை காலால் தடுத்து நிறுத்துவதும் என பயங்கர காமெடி செய்து வருகின்றனர்.

அது போன்று 60, 65 வயதுகளைே கடந்த சில சீனியர் நடிகர்கள் ஆக்‌ஷன் என்ற பெயரில் அதிரடி காமெடி செய்யும் படங்களும் வெற்றிக்கரமாக ஓடி விடுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ் சினிமாவில் 73 வயது கடந்த நிலையிலும், இன்னும் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கமர்சியல் என்ற பெயரில் அவர் காட்டும் ஹீரோயிசம் நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லை அவரது படங்களும் வெற்றி பெறுகின்றன.

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் ரஜினியின் நடிப்பின் மீதும் ஸ்டைல் மீதும் ரசிகர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான ஒரு ஈடுபாடும், ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவரது படங்களை தொடர்ந்து வெற்றி பெற செய்து வருகின்றன. கடந்தமுறை வெளியான ஜெயிலர், சமீபத்தில் வெளியான வேட்டையின் படங்கள் கூட அப்படித்தான் ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது. மற்றபடி வேறு ஹீரோக்கள் நடித்திருந்தால், இது கமர்ஷியல் குப்பைகளாக காணாமல் போயிருக்கும்.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியான இந்த படம், மிகப்பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது. செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகை சமந்தா, ஒரு ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படத்தின் 2ம் பாகமாக வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது. புஷ்பா 2 படம் இப்போது வியாபார ரீதியாகவே 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து விட்டதாக தெரியவந்துள்ளது. படம் வெளியானால் இன்னும் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் விநியோகஸ்தர்கள் பங்கேற்று வெற்றி படமாக, பிரமாண்ட வசூல் செய்ய ஆலோசித்துள்ளனர். இதற்கிடையே புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன் 45 நாட்கள், வெளியான பின்பு 15 நாட்கள் என மொத்தம் 2 மாதங்களுக்கு அல்லு அர்ஜுன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். புஷ்பா 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்களுக்காக மட்டுமே 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது ஆச்சரியம் தந்தாலும் இது உண்மையா இல்லை உருட்டா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்